தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு
ஜெயலலிதா ஏன் பதில் அளிக்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் மீதான
ஜெயலலிதாவின் பதில் ஏமாற்றம் அளிப்பதாகவும், கொலை, கொள்ளை குற்றங்களில்
தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் குற்றம்
சாட்டியுள்ளார்.தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு சீல்குலைந்தது குறித்து நான் எழுப்பி வரும் கேள்விகளுக்கு
ஜெயலலிதா பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் காவல்துறை
மானிய கோரிக்கை மீதான அவரது பதில் உரை ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்துக்
கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் அமர்ந்து பிரச்சனைகளை விவாதிப்பது
தான் மரபு. இந்த ஆட்சியில் அந்த ஜனநாயக மாண்பு இல்லை. எதிர்க்கட்சிகளை
புறக்கணிக்கும் போக்குடன் செயல்படும், சபாநாயகர் தனபால் அந்த பதவிக்கே
கரும்புள்ளியாக விளங்குகிறார்.
முதல் அமைச்சர் ஒருவர் கேள்வி நேரத்தையே புறக்கணிப்பது என்பது, இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது. கேள்வி நேரம் இப்போது கேலி நேரமாக மாறிவிட்டது. எதிர்க்கட்சியினரை, குறிப்பாக திமுக தலைவர் கலைஞரை அவமதிக்கும் வகையில், கேள்வி நேரத்தில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
முதல் அமைச்சர் ஒருவர் கேள்வி நேரத்தையே புறக்கணிப்பது என்பது, இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது. கேள்வி நேரம் இப்போது கேலி நேரமாக மாறிவிட்டது. எதிர்க்கட்சியினரை, குறிப்பாக திமுக தலைவர் கலைஞரை அவமதிக்கும் வகையில், கேள்வி நேரத்தில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
கலைஞர்
முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அண்ணா முதல் அமைச்சராக
இருந்திருக்கிறார். காமராஜர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். இப்படி
பலர் முதல் அமைச்சராக இருந்த காலக்கட்டங்களில் எந்த முதல் அமைச்சரும்,
கேள்வி நேரத்தை புறக்கணித்திருந்ததை நாம் பார்த்திருக்க முடியாது. ஏதோ ஒரு
நாள், இரண்டு நாள் பல நிகழ்ச்சிகளின் காரணமாக, அவசர பணியின் காரணமாக
வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். கேள்வி நேரம் என்பது முக்கியமான
நேரம். கேள்வி நேரத்திலே துணை கேள்விகளும் வரும். கேள்வி நேரத்தில் கேள்வி
கேட்டு, அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்லியாகனும். அந்த கேள்வி நேரத்தை இந்த ஜெயலலிதா ஆட்சி கேலி நேரமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில்
அரசும், தனியாரும் இணைந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை
தடுக்க முயற்சித்தாலோ, தட்டி கேட்டாலோ அவர்கள் லாரி ஏற்றி கொலை
செய்யப்படுகிறார்கள். பொட்டு சுரேஷ் கொலை, அத்வானி பைப் வெடிகுண்டு சதி,
கே.என்.நேரு தம்பி கொலை, சென்னை ரயில் குண்டு வெடிப்பு என ஏராளமான
வழக்குகள் விசாரணையிலேயே முடங்கி விட்டது. குற்றவாளிகள் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த
3 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்துள்ள கொலை, கொள்ளை சம்பவங்களை பட்டியலிட்ட
அவர், குற்றச் செயல்களில் தமிழகம் தென்னிந்தியாவிலேயே முதல் இடத்தில்
உள்ளது. இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்றார். nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக