செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தாராபுரத்தில் 11 கொத்தடிமைகள் மீட்பு !

தாராபுரம், ஆக.4_ தாராபுரத்தில் தனியார் செங்கல் சூளையில் கொத் தடிமைகளாக வேலை செய்து வந்த 11 கூலி தொழி லாளர்கள் மீட்கப்பட்ட னர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்_உடுமலை சாலை திருமலைபாளை யம் பிரிவு அருகே தனியார் செங்கல் சூளையில் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100_க்கும் மேற் பட்ட கூலி தொழிலாளர் கள் வேலை பார்த்து வந்தனர். கடந்த 3 மாதம் முன்பு விழுப்புரம் மாவட் டம் வெள்ளயம்பட்டியைச் சேர்ந்த முனியன் உள்பட 11 பேர் அந்த செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2 நாளாக வெளியே விடாமல் குடி சைக்குள் கொத்தடிமை களாக அடைத்து வைத்து செங்கல் சூளை உரிமை யாளர்கள் அடித்து கொடு மைப்படுத்துவதாக தாரா புரம் காவல்துறையின ருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது குடிசையில் அவர்கள் அடைத்து வைக் கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து வட்டாட் சியர் ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர், செங்கல் சேம்பர் உரிமையாளர்களி டம் விசாரித்தனர். மேலும் அவர்கள் 11 பேரும் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப் பட்ட முனியன் கூறுகை யில், நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் செங்கல் உற்பத்தியில் ஈடு பட்டு வந்தோம். இந்த செங்கல் சேம்பரிலிருந்து பெண் ஒருவர் எங்களை இங்கு வேலைக்கு அழைத்து வந்தார்.
இதற்காக நாங்கள் எந்த முன்பணமும் சேம்பர் உரிமையாளர்களிடம் வாங்கவில்லை. இதுவரை செய்த வேலைக்கு மட் டுமே கூலி வாங்கி வந் தோம். ஆண்டுதோறும் எங்கு வேலை பார்த்தாலும் ஆடி விழாவிற்கு ஊருக் குச் செல்வது வழக்கம்.
கடந்த 3 நாளுக்கு முன்பு ஊருக்குச் செல்ல புறப் பட்டபோது எங்களைப் போகவிடாமல் குடிசைக் குள் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தினர். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் எங்களை மீட்டனர் என் றார்.
viduthalai.in/c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக