வெள்ளி, 18 ஜூலை, 2014

துப்பரவு பணியாளர் இருவர் பலி ! செப்டிக் டான்க் சுத்தம் செய்யும் தந்தையும் மகனும் தவறி விழுந்து ...

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (56). சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் மணிகண்டன்(27). இவர் 2ம் புலிக்காடு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முத்துப்பேட்டை சுரேஷ் (28).நேற்று இரவு 7.30 மணிக்கு தங்கவேலு, மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகியோர், மல்லிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய அதன் மூடியை திறந்தனர். அப்போது சுரேஷ் எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்கில் விழுந்து விட்டார். அவரை காப்பாற்ற தந்தையும், மகனும் உள்ளே குதித்தனர். அவர்கள் டேங்கில் மூழ்கி விட்டனர்.


தவறி விழுந்த சுரேஷ் மேலே எழுந்து வந்து விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை தஞ்சை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதை பார்த்த பொதுமக்கள் பேராவூரணி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.  வீரர்கள் வந்து செப்டிக் டேங்கில் மூழ்கிய தந்தை, மகனை தேடினர். சிறிது நேரத்தில் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களதுஉடல் பேராவூரணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் மல்லிப்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக