புதன், 9 ஜூலை, 2014

சிவகாசியில் தொடரும் பட்டாசு வெடி விபத்து ! தொழிலாளர் தினமும் செத்து செத்து ....

Sivakasi ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்கிறதோ இல்லையோ, சிவகாசி பட்டாசுத் தயாரிப்பில் ‘தொழிலாளர்கள்’ வெடித்து சிதறுவது தவறாமல் நடக்கிறது. நேற்றும் படுகொலைகள். பேரனும் பாட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சீன தயாரிப்பு பட்டாசுகள் வந்தால், மொதாலாளிகளுக்கு எந்த நஷ்டமும் இல்ல, தொழிளார்களின் வாழ்க்கை தான் பாதிக்கப்படும் என்பதுபோல் கருணையோடு அந்நிய முதலீடு எதிர்ப்பாளர்கள் போல்,
தொழிலாளர்களை முன்னிறுத்தி போராடுகிற முதலாளிகளும் முதலாளிகளின் தொழிற்சங்கங்களும்;
தொழிலாளர்கள் இப்படி வெடித்து சிதறுவதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.
இந்தியா – சீன சண்டையின் போது பெரியார் சொன்னார், சீனாக்காரன் ஜெயிக்கனும். அவன் வந்து நம்மள ஆளட்டும். ஏன்னா அவனுக்கு ஜாதி கெடையாது.’ ஜாதி வெறி கொண்ட இந்த தேசத்தை விட சீனாகாரன் எவ்வளவோ மேல் என்ற தொனியில்.

அதுபோல் சீன பட்டாசு வந்தால் வேலைதான் போகும். உயிர் போகாது இல்ல. இப்ப என்ன சிவாகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் 3 வேளையும் விருந்து சாப்பிட்டு பென்ஸ் கார்லயா போகிறார்கள்?
இப்படி உயிரையே பணயம் வைத்து வாழ்ந்து, பாதி வயிறு கஞ்சியை குடிப்பதற்கு பட்டினியே மேல்.
உயிரே போனதற்குப் பிறகு வேலை எதற்கு?
பட்டாசு கம்பெனி முதலாளிகள் கோடி கோடி யாக சம்பதிப்பதற்காக?
(படத்தில் நீங்கள் பார்ப்பது ஈழத்தமிழர்கள் மேல் சிங்கள ராணுவம் போட்ட குண்டல்ல. சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை தொழிலாளார்கள் மீது இந்த சமூகம் போட்ட குண்டு)  mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக