திங்கள், 21 ஜூலை, 2014

கலைஞர் எச்சரிக்கை :புகார்கள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை ! ஸ்டாலினுக்கு மட்டும் விதிவிலக்கு ?

சென்னை:'கட்சி தேர்தலில், புகார்கள் தொடருமானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:லோக்சபா தேர்தலில், தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு தோற்று விட்டது. இனி, இங்கே இருந்து பயனில்லை; பழுத்த மரத்தைத் தேடிச் செல்லாம் என, நடவடிக்கை எடுக்கப்பட்ட, 33 பேரில், ஒருவரை தவிர, வேறு யாரும் எண்ணிக்கூட பார்க்கவில்லை.அந்த ஒருவரும் கூட, அங்கிருந்து வந்தவர் தான். அவரை, நாம் தான் துாக்கி வைத்து அமைச்சர் பதவியும் கொடுத்தோம். ஆனால், அவர் தன் குணத்தைக் காட்டிவிட்டார். விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, கட்சி தலைமையை தாக்கி, பதில் அளித்திருந்தார்.ஏற்கனவே ஸ்டாலின் பஜனையால்  தொண்டர்கள் புட்டுகொண்டு போய் விட்டார்கள் ...இப்போது இருக்கும் கட்சி தலைவர்களையும் விரட்டி விரட்டி அடியுங்கள்


தி.மு.க., கடுமையாக நடவடிக்கை எடுக்கும்; தேவையானால், பலர் மீது நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கும். அதனால், ஏராளமானவர்கள் கட்சியை விட்டு, மாற்றுக் கட்சிக்கு சென்று விடுவர். தி.மு.க., இல்லாமல் போய்விடும் என, சிலர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.இப்படி மனப்பால் குடித்தவர்கள் எல்லாம், கட்சியின் நடவடிக்கை காரணமாக, ஏமாந்து போய் விட்டனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் வருத்தம் அடையலாம். அவர்களுக்கெல்லாம் ஆறுதலாகத்தான் விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகர தேர்தல்கள் வரவிருக்கின்றன. அந்த தேர்தலில், உண்மையில் தவறு செய்தவர்களை தொண்டர்கள் தோற்கடிக்க செய்வர்.அதையும் மீறி தவறுகள் தொடருமேயானால், புகார்கள் தொடருமானால், கட்சி கட்டுப்பாடு தான் முக்கியம். அதனால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக