திங்கள், 21 ஜூலை, 2014

மத்திய அரசுக்கு எதிராக இயக்கம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கோல்கட்டா: விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோடி அரசுக்கு எதிராக இயக்கம் ஒன்று நடத்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.கோல்கட்டாவில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மேற்கு வங்க மாநிலத்தில், ஒரு பெரிய அரசியல் சக்தியாக பா.ஜ., உருவாக முடியாது. மத்தியில் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பெட்ரோல், டீசல் விலையையும், ரயில் கட்டணத்தையும் உயர்த்தி விட்டது. தேர்தலுக்கு முன் பல விஷயங்கள் பற்றி பெரிதாகப் பேசிய பா.ஜ.,வினர் ஆட்சிக்கு வந்த பின் அதற்கு முரணமாக நடக்கின்றனர். அதனால் விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோடி அரசுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக இயக்கம் ஒன்று நடத்தப்படும். மேற்கு வங்கத்தில் மதவாத கட்சிகளுக்கு இடமில்லை. லோக்சபா தேர்தலில் இரண்டு இடங்களைப் பிடித்தும் ஏதோ பெரிய அளவில் சாதித்து விட்டதாக பிரசாரம் செய்கின்றனர். பொய்களை அள்ளி விடுகின்றனர். இரண்டு இடங்களுக்கு மேல் அவர்களால் எப்போதும் பெற முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தா dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக