திங்கள், 7 ஜூலை, 2014

தர்மபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்றவர்களின் மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம்தேதி கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் தங்கள் தூக்குத் தண்டனையை குறைக்கவேண்டும். 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தூக்குத்தண்டனையை ஏற்கமுடியாது என்று கூறியிருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. maalaimalar.com அடிமைகள் கட்சியான அதிமுகவில் அம்மாவுக்காக எதுவும் செய்யக்கூடிய அளவு stockholm syndrome  ஸ்டோக்ஹோம் சின்றோம் என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உண்டு. இனியும் தர்மபுரி பஸ் எரிப்பு கொலைகள் போன்ற கண்றாவிகள் நடக்க கூடிய வாய்ப்பு உண்டு, அம்மா வரும் ரோட்டை விழுந்து வணங்கும் மனிதர்கள் உள்ள நாடு இது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக