திங்கள், 7 ஜூலை, 2014

செல்வராகவன் : நான் பணத்துக்காக படம் பண்ண மாட்டேன் ! சார் இரண்டாம் உலகம் கதையை இனியாச்சும் சொல்லுங்க !முடியல்ல ,

பணத்திற்காக எந்த ஒரு படத்தையும் இயக்குவதில்லை என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கினார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்பு, த்ரிஷா இணைப்பில் ஒரு படத்தினை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். அப்படத்தை வருண் மணியன் தயாரிப்பதாக இருந்தது. அப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. 'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எப்போதுமே ஒரு படத்தை நிர்பந்தத்துக்காகவோ பணத்திற்காகவோ இயக்கியது இல்லை. ஒரு திரைக்கதை என்னை அடிமையாக்க வேண்டும். ஒருவழியாக, ஒரு நல்ல திரைக்கதை கிடைத்திருக்கிறது. அதை முழுமையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அப்படம் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக