ஞாயிறு, 20 ஜூலை, 2014

அழகிரி : திமுகவில் என்னனவோ நடக்கிறது ! சநதி சிரிக்கும்

தி.மு.க.வில் இருந்து தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சரியாக பணியாற்றாத காரணத்தை கூறி முன்னாள் அமைச்சர்கள் முல்லை வேந்தன், பழனி மாணிக்கம், தர்மபுரி வடக்கு மாவட்ட செயலாளர் இன்பசேகரன் ஆகியோரை தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து கட்சி தலைமை உத்தரவிட்டது.இந்த நிலையில் முல்லை வேந்தன் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், இன்ப சேகரன் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பு செயலாளருமாக இருந்த மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர்,  ‘’முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் முல்லை வேந்தன் என்ன கருத்தை சொன்னாரோ, அதே கருத்தைத்தான் கே.பி.ராமலிங்கம் எம்.பி.யும், கூறியி ருந்தார்.
தி.மு.க. கரை வேட்டியை கட்டிக்கொண்டு தான் கே.பி.ராமலிங்கம் பேட்டியளித்தார். ஆனால் முல்லை வேந்தனை நீக்கிய கட்சி தலைமை கே.பி.ராமலிங்கத்தை நீக்கவில்லை. அவர் ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பதால் அவரை நீக்க பயப்படுகின்றனர். இதனால் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் மேலும், மேலும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துமே தவிர சிக்கலை தீர்க்க உதவாது.
தி.மு.க.வில் இன்னும் நிறைய நடக்கின்றன. அவை வெளியில் வரும்போது சந்தி சிரிக்கும். அது கூடிய விரைவில் நடக்கும்’’என்று தெரிவித்துள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக