வெள்ளி, 18 ஜூலை, 2014

வாரணாசி தேர்தல் வழக்கு ! மோடிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !

அலகாபாத்: வாரணாசி வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அஜய்ராய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மோடி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் அவரது மனைவி யசோதாபெண்ணின் வருமானம் குறித்த தகவல்களையும், கணக்கு எண்ணையும் குறிப்பிடாமல் விட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கூறியுள்ளார்.  இப்படிதாய்ன்  முந்தி  இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாதுன்னு  ராஜ்நாராயணன் என்கின்ற யூரின் தெரபிஸ்ட் இதே அலகாபாத்தில் வழக்கு போட்டார் .எல்லா பயலுவளும் இது பத்தி கண்டுக்காம இருதாக , ஆனா அந்த வழக்குல ராஜநாராயணன் வெற்றி பெற்றார் இது எப்படியோ ?
தேர்தல் பிரச்சாரத்திற்கு 70 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில் பிரச்சாரத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டதாகவும், பாஜக தலைவர்கள் பலர் நாள் கணக்கில் ஆடம்பர விடுதிகளில் தங்கி தேர்தல் பணியாற்றியதாகவும் அஜய்ராய் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் உருவம் பொறித்த தொப்பிகள், மற்றும் பணியன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக