சனி, 5 ஜூலை, 2014

பருவமழை பொய்க்கும் வறட்சி அதிகரிக்கும்

புதுடில்லி : 'இந்த ஆண்டு நாட்டின் சராசரி மழைப்பொழிவின் அளவு மிக குறைவாக இருக்கும்; வறட்சி அதிகரிக்கும்' என, தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு, நாடு முழுவதும் பருவமழையில் பெரும் மாற்றம் காணப்படும். சராசரி மழைப் பொழிவை விட மிகவும் குறைந்த அளவே மழைப் பொழிவு இருக்கும். கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக குறைந்த மழை பெய்யும். ஆண்டுக்கு, 96 - 104 சதவீதம் வரை மழைப்பொழிவு இருந்தால் அது சராசரி மழைப்பொழிவு எனப்படும். இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவாக, 91 சதவீத மழைப்பொழிவு மட்டுமே இருக்கும்.பருவமழை குறைவால், நாடு முழுவதும் 60 சதவீதம் வறட்சி ஏற்படும். வடமேற்கு மாநிலங்களில், 80 சதவீதமும், மத்திய மாநிலங்களில், 75 சதவீதமும், தென் மாநிலங்களில், 50 சதவீதமும் வறட்சி பாதிப்பு ஏற்படும்.  இலவசமாக  கிரைண்டர், லாப்டாப், மலிவு விலையில் சாப்பாடு, மருந்து, மலிவு விலையில் தண்ணி, அதிக விலையில் தண்ணீர் (டாஸ்மாக்)... எப்படி வறட்சி இவர்களை பாதிக்கும்?...
கடந்த மாதம், சராசரி அளவை விட, 43 சதவீதம் குறைவாக மழை பெய்துஉள்ளது. ஆனாலும், ஆகஸ்ட்டில் சில இடங்களில் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

'இந்த ஆண்டு வறட்சி அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மைய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளில், கடந்த ஆண்டு நீர் இருப்புடன் இந்த ஆண்டு நீர் இருப்பு ஒப்பிடப்பட்டது.

அணைகளில் நீர் இருப்பு குறைவு



அதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், உ.பி., உத்தரகண்ட், ம.பி., மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய, 12 மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக