செவ்வாய், 22 ஜூலை, 2014

மார்க்கண்டேய கட்ஜூ குற்றச்சாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மறுப்பு

புதுடெல்லி  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிக்கு 2004–ல் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடியை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.சி.லகோத்தி, ஒய்.கே.சபர்வால் ஆகியோரும் அறிவார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பரபரப்பு புகார் கூறி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், மனித உரிமைகள் கமிஷன் தலைவருமான கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்தார். இது குறித்து, அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதில் துளியளவும் உண்மை இல்லை. நீதிபதிகள் பதவி நீட்டிப்பில் பின்பற்றப்படும் கடுமையான விதிமுறைகள்தான் அவர் கூறும் நீதிபதி விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் யாருக்கும் எந்த நெருக்கடியும் அளிக்கப்படவில்லை. கட்ஜூ கூறும் நீதிபதி காலமாகிவிட்டார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கட்ஜூ ஏன் இந்த பிரச்சினையை எழுப்புகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக