சனி, 26 ஜூலை, 2014

எனக்கு ஜாதிபெயர் வேண்டாம் ! வெறும் பார்வதிதான் !

தமிழில் ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள் மலையாளத்தில் நடித்தாலும் தமிழில் வெளியான ‘பூ’ படம் இவருக்கு நடிகைக்கான அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படத்திற்காக இவர் பல விருதுகளை வாங்கினார். பின்னர் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’, தனுசுடன் இணைந்து ‘மரியான்’ படத்திலும் நடித்தார். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் பற்றி பார்வதி கூறும்போது, இப்படம் வெற்றியடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.


மேலும், “என் பெயரை பார்வதி மேனன் என்று அழைக்கிறார்கள். அப்படி என்னை அழைக்காதீர்கள். என் பெயர் பார்வதி தான். பாஸ்போர்ட்டில் பார்வதி என்றுதான் இருக்கிறது. பார்வதி என்று என்னை கூப்பிடுவதையே நான் விரும்புகிறேன். ஒரு கன்னட படத்தில் என் பெயரை பார்வதி மேனன் என்று போட்டார்கள். அதிலிருந்து அனைவரும் என்னை அப்படியே கூப்பிடுகிறார்கள். ஆதலால் என் பெயரில் உள்ள மேனனை தூக்கிவிட்டு பார்வதி என்றே அழையுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக