வியாழன், 24 ஜூலை, 2014

குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை ! கனிமொழி எம்.பி. புதிய மனு !

புதுடெல்லி; சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. எம்.பி. கனிமொழி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை முன்கூட்டி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லி சி.பி.ஐ தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.   கனிமொழியவர்களே ஏதாவது பண்ணி  நானும் பாப்பாத்திதான் என்று  ஒரு சேர்டிபிகட் வாங்குங்க , அப்புறம் பாருங்க எப்படி சலாம் போடுவாங்க நம்ப நீதிமான்கள் ?

இந்த நிலையில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தி.மு.க எம்.பி. கனிமொழி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி, அவர் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
புதிய மனு இந்த மனுவை அப்போது விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 27–ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் தன் மனு மீதான விசாரணையை முன்கூட்டியே விரைந்து முடிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து கனிமொழி எம்.பி. சார்பில் புதிய மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
‘குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை’ அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
சி.பி.ஐ. தரப்பில் மனுதாரர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. கடந்த 2011–ம் ஆண்டு அக்டோபர் 22–ந்தேதி அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி மனுதாரர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 9–ந்தேதி, மனுதாரரின் ரத்து செய்யக்கோரும் மனுவின் மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. மேலும் வேறு எந்த கோர்ட்டும் இந்த வழக்கின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கக்கூடாது என்றும், இந்த வழக்கில் இதுபோன்ற தடை கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே விசாரிக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
விலகிய பின்னர்.. அதன் அடிப்படையில் சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்பியது. இந்த மனுவின் மீதான விசாரணையை 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27–ந்தேதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரருக்கும், குற்றப்பத்திரிகையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ள பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் மனுதாரர் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த 18 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றவையாகும்.
தினந்தோறும் விசாரணை சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த உடனே டெல்லி ஐகோர்ட்டில் ரத்து செய்யக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நாள்தோறும் நடைபெற்று, தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லி ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரும் மனுவை தாக்கல் செய்து இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டன. இந்த நிலையில் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டால் குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரும் மனு பயனற்று போகும். எனவே குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரும் தற்போதைய மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முன்கூட்டியே நடைபெற மனுதாரர் சார்பில் கோரப்படுகிறது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக