வெள்ளி, 4 ஜூலை, 2014

பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் மக்களின் மனதில் நிற்பவர் சமுக நீதி காவலர் மாண்பு மிகு வி பி சிங் !


சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர் களின் பிறந்த பொன்னாள் இந்நாள்!(1931)
எத்தனையோ பிரதமர்கள் வந்தார்கள், போனார்கள் - இருந்தார்கள் - விடை பெற்றார்கள். ஆனால், வி.பி.சிங் போல காலத்தால் அழிக்கப்பட முடியாத நினைவுச் சின்னமாக இருப்பவர்கள் யார்?
மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற் படுத்தப்பட்டவர்களுக்குச் சமூகநீதி வழங்கிய சாத னைச் சரித்திரம் அவர். மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தவர். அதன் காரண மாகத்தான் ஆட்சியையும் இழந்தார் - இன்னும் சரி யாகச் சொல்லப்போனால், அந்தப் பதவி இழப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி என்னும் குன்றாப் பரிசை நல்கியவர்.
அந்த சமூக நீதிப் பிரகடனத்தை அவர் நாடாளுமன்றத்தில் வெளி யிட்டபோது தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம்மனோகர் லோகியா ஆகியவர்களின் கனவு நனவாகிறது என்ற சரித்திரச் சொல்லாடல் களைப் பதிவு செய்தவர்.

இந்த ஆணையைப் பிறப்பித்த காரணத்தால், வெளியிலிருந்து வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள அரசுக்கு ஆதரவு அளித்து வந்த பி.ஜே.பி. தனது ஆதரவை விலக்கிக் கொண்டு, அதன்மூலம் ஆட்சியைக் கவிழ்த்தது.
கொஞ்சம்கூட களை இழந்துவிடவில்லை அவர் - முகமலர்ச்சியுடன் ஒளிவிட்டுப் பிரகாசித்தார்.
ஆட்சிக் கவிழ்க்கப்படு முன் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். தோற்போம் என்று தெரிந்திருந்தும், அதற்கு வழிவகுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அருமை, அரு மையிலும் அருமையானது!
சமூகநீதியில் யார் எந் தப் பக்கம் என்பது இதன் மூலம் நாட்டிற்கு அடை யாளம் காட்டிடப் பயன் படுமே என்றார். (தமிழ்நாட் டின் அதிமுக உறுப்பினர் கள் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கைதூக்கினர்).
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைக் காணும்பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சிப் பெறு கிறேன் என்று வாயார - மனமாரப் புகழ்ந்தவர்.
சொட்டு நீர்கூட அருந் தாமல் மும்பையில் அவர் இருந்த பட்டினிப் போராட்டம், அவரது சிறுநீரகத்தைப் பாதித்தது. கடைசி வரை அதிலிருந்து அவர் மீள வில்லை.
அவருக்குச் சிறுநீரகம் அளிக்க நான், நீ! என்று முந்திக்கொண்டு கருஞ்சட்டை இளைஞரணித் தோழர்கள் சிறுநீரகம் கொடையளிக்க முன்வந்த துண்டு - நெகிழ்ந்து போனார் அந்த மன்னர் குல வழிவந்த மாண்பாளர்!
வாழ்க வி.பி.சிங்!
வளர்க அவர் நட்டு வித்த சமூகநீதிச் செடி
.viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக