செவ்வாய், 22 ஜூலை, 2014

ஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போக யார் காரணம் ? சித்தார்த் கடும் கோபம் !

சிவாஜிகுடும்பத்தின் அரிமா நம்பி வெளியாகி  வெற்றி கரமாக ஓடுகிறதாம் ? சொந்த தியேட்டர்கள் ! பிரபுவின் மகன் விக்ரம் நடித்திருக்கிறார் கலைபுலி தாணு தயாரித்திருக்கிறார் . தமிழ் சினிமா உலகில் ஒருவித மாபியா பாணி வர்த்தகம்தான் நடைபெறுவதாக  நியாயமான  சந்தேகம்  ! பாருங்கள் பணம் செய்யும் வேலை ?  விக்ரம் பிரபுவை எல்லா மீடியாக்களும் ஓஹோ ஓஹோ ஒஹ்ஹ்ஹோஓ 
சென்னை: ஜிகர்தண்டாபடம் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதற்கு  காரணமானவர்களை கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார் பட ஹீரோ சித்தார்த்.சித்தார்த், லட்சுமி மேனன் நடித்திருக்கும் ஜிகர்தண்டா படத்தை பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் 2 மாதங்களுக்கு முன்பே ரிலீசாக வேண்டியது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. யு சான்றிதழ் வாங்கினால்தான் கேளிக்கை வரி விலக்கு சலுகை கிடைக்கும் என்பதால் சில வன்முறை காட்சிகளை நீக்கும்படி கார்த்திக் சுப்புராஜிடம் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
அவர் அதை ஏற்கவில்லை. இந்த பிரச்சினையால் படம் தாமதமானது. கடைசியாக யு/ஏ சான்றிதழுடன் வரும் 25ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரிலீஸ்தள்ளிப்போயுள்ளது.இதுகுறித்து டுவிட்டரில் சித்தார்த் கூறும்போது, சிலரது அழுத்தம் காரணமாக ஜிகர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. எங்களிடம் (பட டீம்) கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான விளையாட்டில் யார் ஈடுபட்டார்களோ அவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்கிறேன். ரிலீசை நீங்கள் தள்ளிப்போடலாம். நல்ல படத்தை கொல்ல முடியாது. தடுக்க முடியாது என கடுமையாக சாடியுள்ளார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக