திங்கள், 21 ஜூலை, 2014

மக்களுக்கு நேரடி மானிய பணம் ! மத்திய அரசு காங்கிரசின் திட்டத்தை தொடர தீர்மானம் !

புதுடில்லி: 'ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக, மத்திய திட்ட கமிஷன் மற்றும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் அதிகாரிகள் குழு, நாடு முழுவதும், 300 மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறது. முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டு, அவர்களின் கைரேகைகள், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.ஆதார் அடையாள அட்டையை, மானியம் வழங்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தவும், மத்திய அரசு முடிவு செய்தது.கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், சமையல், 'காஸ்' ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானிய தொகைகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், தவறான நபர்களின் கைகளுக்கு இந்த மானியம் சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து, மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது.  அரசு மானியமாக வழங்கும் பணத்தை இதுவரை இடைதரகு முதலாளிகள்தான் கொள்ளை அடிக்கின்றனர் .இது மக்களின் பணம் , மக்களின் கைகளுக்கு நேரடியாக சேரவேண்டும் ,  நம்ப ஆத்தாவா இருந்தா முந்தய ஆட்சியின் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காகவே இதை கிடப்பில் போட்டிருப்பார், அதிமுகாவுக்கு பாஜக எவ்வளவோ தேவல ?
இதையடுத்து, இந்த திட்டங்களுக்கான மானிய தொகையை, ஆதார் அட்டை உதவியுடன், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், நாடு முழுவதும் பலருக்கு ஆதார் அட்டை வழங்கப்படாதது, வங்கி கணக்கு இல்லாதது போன்ற பிரச்னைகளால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, சமையல் காஸ் சிலிண்டருக்கான நேரடிமானிய திட்டம், இந்தாண்டு ஜனவரியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான அரசு, மத்தியில் பதவியேற்றுஉள்ளதை தொடர்ந்து, நேரடி மானிய திட்டம் ரத்து செய்யப்படும் என, தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆதார் அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, அரசு தரப்பில் ஆய்வு செய்யப்படுவதாக, தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய திட்ட கமிஷன் மற்றும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, நாடு முழுவதும், 300 மாவட்டங்களுக்கு சென்று, ஆதார் அட்டையுடன் கூடிய நேரடி மானிய திட்டத்தால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக நிலை குறித்து ஆய்வுசெய்கிறது.இந்த குழுவின் அறிக்கை, அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் அரசிடம் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். 'அரசின் மானியங்களை பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை அவசியம் என, கட்டாயப்படுத்தக் கூடாது' என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி, சட்ட நிபுணர்களின் உதவியுடன், உச்ச நீதிமன்றத்தை அணுகவும், அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக