சனி, 26 ஜூலை, 2014

ராஜேஷ் கன்னா .3½ லட்சத்திற்கு வாங்கிய பங்களா .95 கோடிக்கு விற்பனை !

மும்பை மறைந்த இந்தி நடிகர் ராஜேஷ்கன்னா வசித்த பங்களா ரூ.95 கோடிக்கு விற்பனையானது. அதை மும்பை தொழில் அதிபர் ஒருவர் வாங்கினார்.
முதல்  சூப்பர் ஸ்டார் இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மறைந்த இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா. இவருக்கு மும்பை பாந்திராவில் உள்ள கார்டர் ரோட்டில் ‘ஆசிர்வாத்’ என்ற பங்களா வீடு உள்ளது. சினிமா உலகில் ராஜேஷ் கன்னா உச்சத்தில் இருந்த காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த பங்களா வீடு முன் திரண்டு அவரை பார்த்து செல்வது வழக்கம். கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை 18–ந் தேதி இந்த பங்களாவில் தான் ராஜேஷ் கன்னாவின் உயிரும் பிரிந்தது. ராஜேஷ்கன்னாவின் இறப்புக்கு பிறகு அவரது மகள்கள் இந்த பங்களாவை ராஜேஷ் கன்னாவின் நினைவிடமாக மாற்ற திட்டமிட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் கை கூடாமல் போனது. ரூ.95 கோடிக்கு விற்பனை இந்தநிலையில் 6,490 சதுர அடி பரப்பளவு உள்ள இந்த பங்களா ரூ.95 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த பங்களாவை மும்பையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சாஸ்ஷி ஷெட்டி வாங்கி இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர் கூறுகையில், ‘‘சாஸ்ஷி ஷெட்டிக்கு இந்த பங்களாவை இடிக்கும் எண்ணம் ஏதும் இல்லை. அவர் அந்த பங்களாவில் குடியிருக்க விரும்புகிறார்’’ என்றார்.
தற்போது ரூ.95 கோடிக்கு விலை போகி உள்ள இந்த பங்களாவை ராஜேஷ் கன்னா, நடிகர் ராஜேந்திர குமாரிடம் இருந்து ரூ.3½ லட்சத்திற்கு வாங்கினார் யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இந்த அழகனுக்கு தான் பொருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பேய் நடமாட்டம் இருப்பதாக பீதி கிளம்பியதால் தான் பங்களா இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இல்லாவிட்டால் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகி இருக்கும் என்று ரியஸ் எஸ்டேட் தரகர் ஒருவர் கூறினார்.
இதற்கிடையே ராஜேஷ் கன்னாவுடன் வாழ்ந்து வந்த அனிதா அத்வானி என்ற பெண் சொத்து பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக