சனி, 12 ஜூலை, 2014

காங்கிரஸ் அரசின் 25 ரயில்வே திட்டங்களை பாஜக அரசு கிடப்பில் போட்டது !

புதுடில்லி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்த, 25 ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தில் பதிலளித்த, மத்திய ரயில்வே அமைச்சர், சதானந்த கவுடா கூறியதாவது:
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டவற்றில், சில திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. மத்திய அரசின் அனுமதிக்காக அத்திட்டங்கள் காத்திருக்கின்றன. அவ்வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்த, 25 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த, போதிய நிதி ஆதாரம் இல்லாததால், இன்னும் செயல்படுத்த முடியவில்லை.மக்களின் தேவை, நிதி ஆதாரம், ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு, திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு அனுமதி வழங்கும். மொத்தமுள்ள, 25 திட்டங்களில், தற்சமயம் மூன்று திட்டங்களை மட்டுமே செயல்படுத்த முடியும். அவை எது என்பது குறித்து, தற்போது கூற முடியாது.இவ்வாறு, அவர் கூறினார் அந்த மூன்று திட்டங்கள் இரண்டு குஜராத்துக்கும், ஓன்று கர்நாடகத்துக்காகவுமாக இருக்கலாம். .dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக