புதன், 25 ஜூன், 2014

MGR உருவாக்கிய சாராய ரவுடி ஜேப்பியாரின் எச்சில் காசுக்கு வாலாட்டும் போலீசு ! வெற்றிவேல் செழியன் கைது !

சாராய ரவுடி ஜே.பியாரின் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுனர்களுக்காக தொழிற்சங்கம் கட்டியதற்காக அப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேருந்து ஓட்டுனர் வெற்றிவேல்செழியன் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வினவில் வெளியாகியுள்ளன. சத்யபாமா நிர்வாகத்தின் இந்த அடாவடிகளுக்கெதிராக தோழர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல்கலைக்கழக நிர்வாகமோ டஜன்கணக்கான முறை ஆஜராகாமல் வாய்தா ராணிக்கு இணையாக சாதனை படைத்தது. இதற்கிடையில் நிர்வாகம் தோழருக்கு தூண்டில் போட்டு பார்த்தது. உனக்கு என்ன விலை என்று தோழரை விலை பேச முயன்றது. எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிட்டு பேசாம ஒதுங்கிக்கொள் என்றது. தோழரோ ஜேப்பியார் முகத்தில் காறித்துப்பினார்.

வெற்றிவேல் செழியன்
தோழர் வெற்றிவேல் செழியன்
இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தோழர் வெற்றிவேல்செழியன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச்செயலாளராக உயர்ந்தார். கடந்த பத்தாண்டுகளாக சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கும் பு.ஜ.தொ.மு விற்கும் நடந்து வந்த இந்த போராட்டத்தில் இறுதியாக பு.ஜ.தொ.மு வெற்றிபெற்றது. “வெற்றிவேல்செழியன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அவரை வேலைநீக்கம் செய்தது தவறு. எனவே வேலைநீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து அவருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும் இன்னபிற சலுகைகள் அனைத்தையும் உடனடியாக வழங்க வேண்டும். வேலையிலும் அமர்த்த வேண்டும்” என்று தொழிலாளர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜேப்பியாரது பல்கலைக்கழக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே விரும்பத்தகாத கசப்பான இந்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது நிர்வாகம்.
தீர்ப்பை அடுத்து தோழர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு வேலைக்காக பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். தோழர் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்த போது பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தார், ஆனால் தீர்ப்பை மதிக்காத திமிர் பிடித்த நிர்வாகம் போக்குவரத்து மேலாளர் மூலம் தோழரை பழிவாங்கும் நோக்கத்துடன் ஆவணங்கள் எதுவுமற்ற ஒரு குப்பை லாரியை ஓட்டச் சொல்லியிருக்கிறது. தோழர் அதை ஓட்ட மறுத்திருக்கிறார். “இதற்கு முன்பு தான் ஓட்டிக்கொண்டிருந்தது கல்லூரி பேருந்து தான் எனவே மீண்டும் கல்லூரி பேருந்தை தான் ஓட்டுவேன்” என்று வாதிட்டிருக்கிறார்.
தோழர் மறுத்ததும், “கடந்த பத்தாண்டுகளாக நீங்கள் பயிற்சி இல்லாமல் இருக்கிறீர்கள் எனவே உங்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்” என்று கூறி ஆம்பூரில் உள்ள சத்யபாமாவின் தோட்டத்திற்கு (இந்த தோட்டத்திற்கும் ஓட்டுநர் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) செல்லுமாறு தோழரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து கூறியுள்ளார் மேலாளர். கடிதத்தை பெற்றுக்கொண்ட வெற்றிவேல்செழியன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால் கிளம்பியவரை போகவிடாமல் வம்புக்கிழுக்கும் நோக்கத்துடன், “ங்கோத்தா பஸ் காசை வங்கிட்டு போய்யா, அதை வேற தனியா சொல்லணுமா” என்று திட்டியதோடு ஒருமையில் பேசியிருக்கிறார் மேலாளர்.
“சார் மரியாதையா பேசுங்க, இப்படியெல்லாம் பேசாதீங்க, ஆம்பூருக்கு போகணுமா வேணாமாங்கிறதை நான் வழக்கறிஞரை கலந்து பேசிட்டு முடிவு பண்ணிக்கிறேன்” என்றிருக்கிறார் தோழர்.
“நீ எவன வேணும்ணா பாருடா ங்கோத்தா. ஒன்னால ஜேப்பியாரோட மயிரை கூட புடுங்க முடியாதுடா…” என்று மீண்டும் இழிவுபடுத்தும் வார்த்தைகளில் பேசியுள்ளார்.
அதற்கு பதிலாக தோழரும் கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார். தோழர் கடுமையாக பேசியதற்கு மேலாளர் தோழரை அடித்துவிட்டான். அவன் அடித்ததும் தோழரும் அவனை திருப்பி அடித்துள்ளார்.
ஜேப்பியார் பயங்கரம்
மேலாளர் கூறியதை ஏற்றுக்கொண்டு கிளம்பிய தோழரை வீணாக சண்டைக்கு இழுத்து தாக்கிய மேலாளர் கரீம், வெற்றிவேல்செழியன் தான் தன்னை தாக்கிவிட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் உடனடியாக ஒரு பொய் புகாரை அளித்தார். பு.ஜ.தொ.மு தரப்பிலும் மேலாளர் கரீம் மீது புகார் அளிக்கப்பட்டது. ஜேப்பியாரின் ஏவல் நாயாக இருக்கும் காவல் துறை நமது புகாரை கண்டுகொள்ளாமல் போலீசே கரீமை மருத்துவமனையில் அனுமதித்ததுடன் தோழர் வெற்றிவேல்செழியனை கைது செய்யவும் திட்டமிட்டது.
“மேலாளர் தான் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் என்பதால் அவருடைய புகாரை தான் எடுத்துக்கொள்ள முடியும்” என்று கூறி வெற்றிவேல்செழியன் மீது முதல் தகவலறிக்கை பதிந்தது. ஆனால் ஒருவரை கைது செய்வதற்கான உச்சநீதி மன்ற வழிகாட்டல்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு ஒரு கடத்தல் கும்பலை போல தமிழக காவல்துறை தோழரை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.
செம்மஞ்சேரி குமரன் நகர் பேருந்து நிறுத்தத்தில் வெற்றிவேல்செழியனை தேடிப்பிடித்ததாகவும், மருத்துவ பரிசோதனை செய்ததில் (அப்படி எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை) அவர் தாக்கப்படவில்லை என்று உறுதியானதாகவும் எனவே அவர் தான் மேலாளர் கரீமை தாக்கியதாகவும் கூறி கைது செய்தனர். கைது செய்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை. தொழிலாளர்கள் மூலம் தகவலறிந்து பு.ஜ.தொ.மு துணைத்தலைவர் பழனியும் பிற தோழர்களும் காவல்நிலையத்திற்கு சென்றனர். முதல் தகவலறிக்கையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தோழர் பழனியை கையெழுத்திடுமாறு கூறியுள்ளார், “இது பொய்யான புகாரின் பெயரில் பதிவு செய்யப்படும் முதல் தகவலறிக்கை எனவே இதில் கையெழுத்திட முடியாது என்று தோழர் மறுத்துள்ளார்.
தோழர்கள் இவ்வாறு போலீசாருடன் வாதிட்டுக்கொண்டிருக்கும் போதே, ஒரு தொழில்முறை கடத்தல் கும்பலை போல திட்டமிட்டு செயல்பட்ட போலீசார் திடீரென்று ஒரு கால்டாக்சியை கொண்டு வந்து நிறுத்தி வெற்றிவேல்செழியனை இழுத்துக் கொண்டு போய் திணித்துக் கொண்டு பறந்து சென்றது.
குற்றவாளியை பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தோழரை கடத்திச்சென்ற சேலையூர் காவல்துறை அவரை தாம்பரம் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் தள்ளி ஜேப்பியாருக்கு விசுவாசமாக வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் நேற்று நடந்தன. தோழரை பிணையில் எடுப்பதற்கான வேலைகளை மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.
போலீசு என்பது நேரடியாகவே முதலாளிகளின் ஏவல் நாய்களாக இருந்து மக்களை கடித்து குதறுகின்றது. ஆனால் நீதி மன்றங்கள் அப்படி அல்ல. அவை பொதுவானவை, அனைவருக்கும் சமமானவை என்று மக்களால் கருதப்படுகின்றன. ஆனால் நீதி மன்றங்கள் எப்போதாவது சில முறைகள் சாதாரண மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அரிதாக சில தீர்ப்புகளை வழங்கினாலும் முதலாளிகளும், ஆதிக்கசாதிகளும் அதை தங்களுடைய மயிருக்கு சமமாக கூட மதிப்பதில்லை என்பதை கள்ளச்சாராய ரவுடி ஜேப்பியாரின் இந்த வழக்கிலும் நாம் காணலாம்.
நீதி மன்றத்தின் தீர்ப்புகளை அவர்கள் இவ்வாறு மயிருக்கு சமமாக மதிக்காத போதிலும் அனைவருக்கும் சமமானதாக கருதப்படும் இந்த நீதி மன்றங்களால், இது தான் தீர்ப்பு என்று நீதி வழங்கிய இந்த நீதி மன்றங்களால் அவர்களை எதுவும் செய்ய முடிவதில்லை. இதுவரை அவ்வாறு எதுவும் செய்ததில்லை இனியும் எதுவும் செய்யப்போவதில்லை. அந்த வேலையை மக்கள் மன்றங்களால் மட்டுமே செய்ய இயலும். அத்தகைய மாற்று மக்கள் அதிகார மன்றங்களை கட்டி எழுப்புவோம். கல்வி வள்ளல்கள் என்கிற போர்வையில் உலவிக்கொண்டிருக்கும் ஜேப்பியார் போன்ற கள்ளச்சாராய ரவுடிகளையும் மக்கள் விரோதிகளையும் தண்டிப்போம். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக