வியாழன், 5 ஜூன், 2014

விஜயகாந்த் : மக்களே மக்களே ! நான் ஷூடிங்க்ல பிசி ! உங்களை அப்புறம் சந்திக்கிறேய்ன் !

லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு ஏற்பட்ட படுதோல்விக்கு, மாவட்ட செயலர்களே காரணம் என, அக்கட்சி தலைவர், விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சில மாவட்ட செயலர்களை கடுமையாக அவர் கண்டித்தது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு தே.மு.தி.க., படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், மாநில நிர்வாகி கள், மாவட்ட செயலர்கள், பல்வேறு அணிகளின் செயலர்கள், துணைச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.தேர்தலுக்காக வசூலித்த நிதியையும், அதன் கணக்கு விவரங்களையும் ஒப்படைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு, மாநில பொருளா ளர் இளங்கோவன் அறிவுரை வழங்கினார்.கட்டுமரமே கழண்டு போச்சு இதுக்குள்ளார  இவரு வேறு
இதைதொடர்ந்து, விஜயகாந்த், அரை மணி நேரம் பேசியுள்ளார்.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலர்களை தான் விஜயகாந்த் கடுமையாக சாடினார். தேர்தல் தோல்விக்கு மாவட்ட செயலர்களே காரணம். கட்சியை வளர்க்க, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மொபைல் போனில் தான் கட்சி பணி செய்கின்றனர். நேரில் எங்கும் செல்வதே இல்லை. ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பரிந்துரையில் தான் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் தேர்தல் வேலையை முறையாக செய்யவில்லை.
பல பூத்களில் தே.மு.தி.க.,வுக்கு ஏஜென்ட்கள் கூட நியமிக்கவில்லை. கடந்த, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் செய்த வேலையை கூட இந்த முறை செய்யவில்லை. இதுவே தேர்தல் தோல்விக்கு அடிப்படை காரணம் என, விஜயகாந்த் கோபமாக பேசினார்.

கரூர் வேட்பாளரும் மாவட்ட செயலருமான கிருஷ்ணன், திருச்சி மாவட்ட செயலர்கள் செந்தில்குமார், விஜயகுமார் ஆகியோரை நேரில் அழைத்தும் கண்டித்தார்.அதன்பிறகு, 14 வேட்பாளர்களையும் தனித்தனியாக தன் அறைக்கு அழைத்து, தோல்வி குறித்து விசாரித்தார். 'தே.மு.தி.க.,வில் இருந்து அ.தி.மு.க.,விற்கு சென்றவர், யாரும் அங்கு நிம்மதியாக இல்லை. தே.மு.தி.க.,விற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. எனவே, தே.மு.தி.க.,வை விட்டு வெளியேற வேண்டாம்' என, வேட்பாளர்களை, அவர், கேட்டுக்கொண்டார்.மீண்டும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், 'வேட்பாளர்கள் சொன்னதை குறிப்பெடுத்துக் கொண்டேன். என் மகன் நடிக்கும் சினிமா வேலையில் 'பிசி'யாக இருக்கிறேன். விரைவில், இதேபோல, மாவட்ட செயலர்களையும் தனித்தனியாக அழைத்து, விசாரிக்க இருக்கிறேன். அதன்பிறகு, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்' என்றார்.

மதியம், 2:00 மணி வரை நடந்த, இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்து, விஜயகாந்த் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு, மட்டன் பிரியாணி, வெங்காய பச்சடி, பிரட் அல்வா, கத்தரிக்காய் தொக்கு ஆகியவை பறிமாறப்பட்டன. விஜயகாந்தின் கண்டிப்பால், சோகத்தில் இருந்த நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பலர், பிரியாணி சாப்பிடாமல் சென்று விட்டனர்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

-நமது நிருபர்- -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக