சனி, 21 ஜூன், 2014

ஓடிஸா சட்டசபையில் இந்தியில் பேச தடை ! சிவசேனா அதிர்ச்சியாம்

ஒடிசா சட்டசபையில் இந்தியில் பேச தடை விதித்ததற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்தி மொழிக்கு முன்னுரிமை மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர விட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிப்பும், ஆதரவும் பெருகி வருகிறது
இந்தநிலையில், ஒடிசா சட்டசபையில் இந்தியில் பேசக் கூடாது என்று அந்த மாநில சபாநாயகர் கேட்டு கொண்டார். மேலும், இந்தி யில் பேச முயன்ற ஒரு எம்.எல்.ஏ.வை ‘இந்தியில் பேசாதீர் கள்’ என்று உத்தர விட்டார். ஒடிசா சட்டசபையில் இந்தி மொழிக்கு தடை விதித்து இருப்பது, சிவசேனா கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி யின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறி இருப்ப தாவது:-


ஒடிசா சபாநாயகர் இந்தி மொழிக்கு தடை விதித்திருக் கிறார். சட்டசபையில், இந்தி யில் பேச முயன்ற உறுப் பினரை இந்தி பேசாதீர்கள் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் இந்தி மொழிக்கு அநீதி ஏற்பட்டு உள்ளது. ஒரியா மொழிக்கு (ஒடிசா மாநில ஆட்சி மொழி) மாற்று மொழி யாக ஆங்கிலம் இருக்கும்போது, இந்திக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்.

அதிர்ச்சி அளிக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழிக்கு இத்தகைய பெருமையை தேடி தந்துள்ளார். தவிர, அவர் பூடான் பாராளுமன்றத்தில் இந்தியில் பேசினார். இந்தி மொழிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போது, ஒடிசா மாநில சட்டசபையில் இந்தியில் கேள்வி கேட்பதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தி மொழியை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவிக் காவிட்டால், வேறு யார் ஊக்குவிப்பார்கள்? ஆங்கிலம் உலக பொதுமொழி என்பதை ஒப்பு கொள்கிறோம். அதே சமயம், தேசிய மொழியான இந்தி மொழிக்கு 2-ம் தர அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அது தான் ஏற்புடையது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக