திங்கள், 23 ஜூன், 2014

அர்விந்த் கேஜ்ரிவால் ஒப்புதல் வாக்குமுலம் : (பிரதமர் கனவில்) டெல்லி ஆட்சியை விட்டு ஓடியது தவறுதான் ! இனி ஓடமாட்டேன் !


 நான் செய்தது பெரிய தவறுதான்: மறந்து விடுங்கள்: இடையில் ஓட மாட்டேன்: கெஜ்ரிவால்
வடக்கு டெல்லியில் ஆதர்ஷ்நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:–
டெல்லி ஆட்சிப் பணியில் இருந்து 49 நாட்களில் நான் பதவி விலகியதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்தது பெரிய தவறுதான். அதை மறந்து விடுங்கள்.
அப்பனே நீவிர் ஐந்தாண்டுகளுக்கு மனநோய் தெரபி எடுக்க வேண்டிய அளவு லூசாகி விட்டீர் உம்மை நம்பி வாக்களித்த மக்களை வெறும் சுய இன்பவாதிகளாக்கி விட்டீர்

இனி தேர்தல் நடக்கும் போது ஆம் ஆத்மி கட்சிக்கு நீங்கள் தனி மெஜாரிட்டி பலத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 40–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியைத் தர வேண்டும். அப்படி தந்தால்தான் எங்களால் நிலையான ஆட்சியைத் தர முடியும்.
அடுத்தத் தடவை என்னிடம் ஆட்சியைக் கொடுத்து பாருங்கள். முன்பு போல இடையில் ஓட மாட்டேன். 5 ஆண்டுகளுக்கு முழுமையான ஆட்சியில் இருப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
டெல்லியில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை நீக்க மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கும் மின் உற்பத்தியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு உள்ளது.
அந்த வகையில் முந்தைய காங்கிரஸ் அரசு போலவே பா.ஜ.க அரசும் செயல்படுகிறது. டெல்லியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க பா.ஜ.க. வினர் எதுவும் செய்ய வில்லை.
நாடெங்கும் பா.ஜ.க. அலை வீசுவதாக பா.ஜ.க. தலைவர்கள் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் டெல்லியில் சட்ட சபைத் தேர்தலை நடத்த வேண்டியதுதானே?
இப்போது டெல்லியில் சட்டசபை தேர்தல் நடத்தத் தயாரா என்று நான் சவால் விடுகிறேன். இனி எப்போது தேர்தல் நடத்தினாலும் நாங்கள் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக