புதன், 4 ஜூன், 2014

தமிழ் நடிகர்கள் வாங்கும் சம்பள விபரம் !

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா?
  கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் பலமொழிகளில் வெளியிடப்படும் படத்திற்கு ரூ. 30 கோடியும், தமிழில் மட்டும் வெளியிடப்படும் படத்திற்கு ரூ.20 முதல் 25 கோடி சம்பளமும் பெறுகிறார்.
 கமல் ஹாஸன் படம் ஒன்றுக்கு ரூ.25 கோடி வாங்குகிறார். அவர் படத்தின் திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்பேற்றால் கூடுதல் சம்பளம் வாங்குவார்.
விஜய் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ.20 கோடி சம்பளம் வாங்குகிறார்.
 அஜீத் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வாங்குகிறார்
படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கும் சூர்யா படம் ஒன்றுக்கு தெலுங்கு உரிமையுடன் ரூ.18 கோடி வாங்கிறார். தெலுங்கு உரிமை மூலம் அவருக்கு மேலும் சில கோடிகள் கிடைக்கும்
விக்ரம் அண்மையில் ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்
கார்த்தியின் படங்கள் அடுத்தடுத்து படுத்துவிட்டதால் அவரது மார்க்கெட் சற்று வீக்காக உள்ளது. அவர் ஒரு படத்திற்கு தெலுங்கு வினியோக உரிமையை சேர்த்து ரூ. 8 முதல் 10 கோடி வாங்குகிறார்.
பாலிவுட், கோலிவுட் என மாறி மாறி நடிக்கும் தனுஷ் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி வாங்குகிறார்.
சிம்பு தனுஷை போன்று படம் ஒன்றுக்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அடிக்கடி செய்தியில் வரும் ஆர்யா ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வாங்குகிறாராம்.
கெரியர் பிக்கப்பாகி சென்று கொண்டிருக்கும் விஷால் படம் ஒன்றுக்கு ரூ. 4 முதல் 5 கோடி சம்பளம் பெறுகிறார்.
யான் படத்தில் நடித்துள்ள ஜீவா படம் ஒன்றுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறாராம்.
tamil.oneindia.in/l

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக