ஞாயிறு, 22 ஜூன், 2014

மறைந்த நடிகை கல்பனாவின் கதையை படமாக்கிய நடிகை பூஜா கண்ணீர் ! நீதிமன்ற தடை !

பூஜா காந்தி தயாரித்து நடிக்கும் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுதார். தடையை  நீக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ‘கொக்கி, ‘திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் ஆகி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அபிநேத்ரி என்ற படத்தை தயாரிப்பதுடன் நடித்தும் வருகிறார். தனது ரீ என்ட்ரி படம் என்பதால் இப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் எழுத்தாளர் பாக்ய கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘அபிநேத்ரி கதை தனது ஸ்கிரிப்ட்.  என்னுடைய அனுமதி இல்லாமல் இப்படத்தை தயாரிக்கிறார்கள் என்று பெங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். http://www.youtube.com/watch?v=aQISOf8XBLo
வழக்கை விசாரித்த கீழ்கோர்ட்டு படத்துக்கு தடை விதித்தது. படத்தின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் தடை விதிக்கப்பட்டதால் பூஜா காந்தி அதிர்ச்சி அடைந்து கண்கலங்கினார். கீழ்கோர்ட் விதித்த தடையை நீக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்திருக்கிறார் பூஜா காந்தி. முன்னதாக கல்பனா குடும்பத்தினரும் இப்படத்தில் கல்பனா வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக