செவ்வாய், 24 ஜூன், 2014

போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுரி மாணவி தற்கொலை ! மாணவிகளின் பாலியல் ராக்கிங் காரணம் ?

சென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான
ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலைசென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டிய சக மாணவிகளை போலீஸார்  கைது செய்துள்ளனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த அந்த மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை விடுதி அருகே யாரும் இல்லாத போது  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி அவரது தந்தை கமலக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கல்லூரிக்கு சென்ற யோகலட்சுமியின் அறையில் போலீஸார்  சோதனை நடத்தினர். அதில் சில சந்தேகங்கள் உருவானது . இதையடுத்து அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக