புதன், 11 ஜூன், 2014

நடிகர் ஜெய் முஸ்லிமாகிவிட்டாராம் ! இனி பலதார குற்றம் கிடையாது ?

யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதுடன் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார்.இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை மொஹமத் காலிக் யுவன் என்றும் மாற்றிக் கொண்டார். இவரைத் தொடர்ந்து, ராஜா ராணி, சென்னை&28, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து சென்னை தி நகரில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார். பின்னர் தனது இணைய தள பக்கத்திலும் ‘அல்ஹமதுல்லஹா என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘அழகி, ‘சிலந்தி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மோனிகாவும் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மறியதுடன் தனது பெயரை எம்ஜி ரஹீமா என்று மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. - See more at: .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக