செவ்வாய், 10 ஜூன், 2014

செல்வராகவன் : இப்போதைக்கு படம் இயக்க மாட்டேன் ! முதல்ல இரண்டாம் உலகம் படக்கதைய விபரமா சொல்லுங்க சார் !

அடுத்த படம் இயக்குவது எப்போது என்பதற்கு பதில் அளித்தார் செல்வராகவன்.இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்க முடிவு செய்ததுடன் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவும் எண்ணி உள்ளார். சிம்பு படத்தை தொடங்குவதற்கான பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.இதுபற்றி செல்வராகவனிடம் கேட்டபோது,‘நான் இப்போது படம் இயக்குவதிலிருந்து இடைவெளி விட்டிருக்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் இயக்குவதுபற்றி கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு அப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்.
இதில் கார்த்தி நடிப்பாரா என்பது பற்றி எதுவும் உறுதி செய்யப்படவில்லை. 3டியில் உருவாக்கும் எண்ணம் இருந்தாலும் தொழில்நுட்ப பணிகள் பற்றியும் இன்னும் திட்டமிடவில்லை. 2ம் பாகம் இயக்குவதற்கு என்ன காரணம் என்கிறார்கள். குறிப்பாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும், வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட படத்தை இயக்குவதற்கு இதுதான் ஒரே வழி. காமெடி படம் ஏதாவது இயக்க எண்ணினாலும் இதுபோன்ற பாணியில்தான் இயக்குவேன் என்றார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக