வெள்ளி, 27 ஜூன், 2014

முல்லைவேந்தன் : ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி…பாசிஸ்ட் பண்பற்றவர் ! அதிருப்தியாளகள் ஒன்று திரள்வார்கள் ?

சென்னை: உள்கட்சி ஜனநாயகம் என்பது திமுகவில் இல்லை, ஸ்டாலின் சர்வாதிகாரம் செய்கிறார் என்று தாக்கியுள்ளார் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள முல்லை வேந்தன். திமுக தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 33 பேரில் முல்லை வேந்தனும் ஒருவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமலேயே தன்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அழகிரியால் வந்த புகைச்சல் முல்லைவேந்தனின் மகனுக்கு 2012ம் ஆண்டு பெங்களூருவில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதற்கு மு.க.அழகிரி வந்திருந்தார். இதுவே ஸ்டாலின் - முல்லைவேந்தன் புகைச்சலுக்குக் காரணம் என்கின்றனர்.
ஸ்டாலின் பண்பற்றவர் என்று குற்றம் சாட்டும் முல்லை வேந்தன், கோபாலபுரத்தில் நடைபெற்ற என்னுடைய மகனின் திருமணநிகழ்ச்சிக்கு அங்கிருந்து கொண்டே வராமல் தவிர்த்து விட்டார். திருமண வரவேற்புக்கு தேதி கேட்டும் கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் 90 வயதிலும் தனக்காக நேரம் ஒதுக்கியவர் கருணாநிதி, மு.க.அழகிரிக்கு தபாலில் அழைப்பு அனுப்பினேன் உடனே பெங்களூருக்கு வந்தார் என்கிறார்
ஸ்டாலின் ஒரு பாசிஸ்ட், கட்சிக்கு உண்மையாக பணியாற்றுபவர்களை எல்லாம் சர்வாதிகாரம் செய்து இம்சித்து வருகிறார். உள்கட்சி ஜனநாயமே திமுகவில் இப்போது இல்லை. ஸ்டாலினின் சர்வாதிகாரம் கட்சியை அழித்து வருகிறது.
கட்சியில் இருந்து என்னை யாரும் டிஸ்மிஸ் செய்யமுடியாது. நானே திமுகவை தூக்கிப்போட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார் முல்லை வேந்தன்
ஸ்டாலினால் பழிவாங்கப்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து புதிய இயக்கம் தொடங்க இருக்கிறேன் என்றும் புது குண்டு ஒன்றை போடுகிறார் முல்லை வேந்தன்
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக