திங்கள், 2 ஜூன், 2014

கால்டுவெல்லுக்கு நேர்ந்த அவமானம்!

10330480_753416194679182_7761847912043421482_n
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியதோடு ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்று ஆரியத்திற்கு எதிராக திராவிடம் என்பதையும் உறுதியோடு பதிவு செய்தவர் மரியாதைக்குரிய கால்டுவெல்.
சமஸ்கிருத கலப்பில்லாமல் தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்டது என்பதோடு, தமிழை திராவிட மொழி என்றே உறுதி செய்தார்.
அதனாலேயே, அவருக்கு பின் வந்த பாரதியார், ‘திராவிடம்’ என்பதையும் கால்டுவெல்லையும் திட்டமிட்டுத் தவிர்த்தார். கால்டுவெல் உட்பட, வெள்ளை கிறித்துவப் பாதிரிகள் பாரத நாட்டுக்குத் தீங்கு செய்து விட்டதாக சபித்தார்.
நீதிக் கட்சிக்கார்களை கடுமையாக விமர்சிப்பதற்கு மட்டுமே ‘திராவிடம்’ என்ற பெயரை பயன்படுத்தினார். திராவிடத்திற்கு பதில் ‘ஆரியம்’ என்பதையே பாரதியார் பெருமையோடு பறை சாற்றினார்.
இப்படியாக கால்டுவெல்லுக்கு எதிராகவும், தமிழை விட சம்ஸ்கிருதம் உயர்வானது என்ற கருத்தும் கொண்ட பாரதியாரை தமிழராக சித்திரிப்பவரும், பெரியாரை தமிழரல்ல என்று புறக்கணிப்பவரும்,
திராவிட இயக்க எதிர்ப்பாளருமான பழ. நெடுமாறனுக்கு; திராவிட கருத்தியலுக்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் தந்த ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாளைக் கொண்டாட, யோக்கியதை இல்லை. இது பச்சையான சந்தர்ப்பவாதம்.
பழ. நெடுமாறன், கால்டுவெல் பிறந்த நாளைக் கொண்டாடியது அவரை அவமானப்படுத்தியதற்கு சமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக