புதன், 4 ஜூன், 2014

ஐ நா செயலாளர் பான் கி மூன் : உபி சிறுமிகள் பாலியல் கொலை உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது !

இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று ஐ.நா. தலைவர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்குள் உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழிவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. நைஜீரியா, பாகிஸ்தான், கலிபோர்னியா மற்றும் இந்தியாவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இரு மைனர் பெண்கள் கழிவறை இல்லாத காரணத்தினால் வெளியே சென்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள்கற்பழிக்கப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


பெண்களுக்கு எதிரான இந்த தாக்குதல்கள் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்குரிய பிரச்சினை. பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இருந்தாலும் துரதிருஷ்டமாக உலகம் முழுவதும் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.

ற்றுக்கொள்ள முடியாத, சகதித்துக்கொள்ள முடியாத இந்த சம்பவங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு பான் கி மூன் கூறியுள்ளார் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக