புதன், 18 ஜூன், 2014

திமுகவில் அவமானப்பட்ட குஷ்பு அரசியலில் இருந்து ஒய்வு பெறமாட்டார் !

தி.மு.க.,வில் தன் உழைப்பும், அர்ப்பணிப்பும் ஒருவழிப் பாதையாகவே இருப்பதால், தாங்க முடியாத மன அழுத்தத்தில் இருப்பதாகச் சொல்லி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார், நடிகை குஷ்பு.< இது, தி.மு.க.,வில் பெரும் சலசலப்பை ஏற்பத்தியிருக்கிறது. கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், குஷ்புவை சமாதானப்படுத்தி, மீண்டும் தி.மு.க.,விலேயே இணைய வைக்கும் முயற்சி யில், இறங்கி இருப்பதாகவும் தகவல் பரவியிருக்கிறது. தன்னை மீறி...ஆனால், அவர்களிடம் தன் உள்ளக் குமுறல்களையெல்லாம், கொட்டியிருக்கும் நடிகை குஷ்பு, 'இனிமேல், நான் தி.மு.க.,வில் நீடிப்பது, சரியாக இருக்காது. அங்கே, மக்களை ஈர்த்து, கூட்டத்தை கூட்டக்கூடிய சக்தி உள்ள வர்கள் யாரும் இருக்க முடியாது. தலைவர் கருணாநிதிக்கு, அடுத்த நிலையில் தலைவராக வர விருப்பப்படுகிற வர்கள், தன்னை மீறி, யாரும் வளர்ந்து விடக்கூடாது என, நினைக்கின்றனர். அதனால், என்னைப் போன்றவர்களை, திட்டமிட்டு புறக்கணிப்பது மட்டுமல்ல, அவமானப்படுத்தவும் செய்தனர். அதனால் தான், கவுரவமாக அங்கிருந்து வெளியேற முடிவெடுத்து விட்டேன்' என, சொல்லி, அந்த தலைவர்களை அனுப்பி விட்டதாக தெரிகிறது.


இதுகுறித்து, குஷ்பு ஆதரவாளர்கள் கூறியதாவது:
வடமாநிலத்தைச் சேர்ந்த குஷ்பு, நடிப்பதற்காக தான், தமிழகம் வந்தார். ஆனால், அவர் தமிழக கலாசாரத்தின் மீதும், வரலாற்றின் மீதும், அதீத ஈடுபாட்டுடன், நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டார். பின், ஒருநாள் தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவர் பார்க்க விரும்பி, அவரை சந்தித்தார். அப்போது, அவர் தமிழக அரசியல் குறித்து, நிறைய விஷயங்களைப் பேசினார். அதன்பின் தான் அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். இயற்கையிலேயே, தி.மு.க.,வின் மீது, தனக்கு மரியாதை யும், ஈடுபாடும் இருப்பதாகச் சொல்லி, 2010ல் தி.மு.க.,வில் இணைந்தார். தொடர்ந்து, அவருடைய கலைப் பணிகளுக்கு இடையில், தீவிரமான அரசியல் பணியும் நடந்தது.தி.மு.க.,வில் யார் அடுத்த தலைவர் ஆவது, என்கிற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது, நிருபர் ஒருவர், அது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, 'தி.மு.க., என்பது ஜனநாயக ரீதியிலான இயக்கம். இங்கே பொதுக் குழு, செயற்குழுவெல்லாம் இருக்கிறது. பொதுக் குழு, செயற்குழு கூடி முடிவெடுத்து, யாரை தலைவராக தேர்வு செய்கின்றனரோ, அவர்கள் தான், அடுத்த தலைவராக வர முடியும்' என, கட்சி யின் நடைமுறையை வெளிப்படையாகச் சொன்னார்.இதற்காக, தி.மு.க.,வினரே திருச்சியில், ஓட்டலில் தங்கியிருந்த அவரை துரத்தி அவமானப்படுத்தினர். சென்னையில், அவருடைய வீட்டைத் தாக்கினர்.

இந்த சமயத்தில் தான், அவர் மனம் உடைந்தார். அப்பவே, அவர் தி.மு.க.,வில் இருந்து விலகிக் கொள்ளலாம் என, முடிவெடுத்தார். ஆனால், கருணாநிதி தான், அப்படியொரு முடிவை எடுக்கக் கூடாது என, சொன்னதோடு, காலப் போக்கில், சூழ்நிலைகள் சரியாகி விடும் என, சொன்னார். தலைவர் சொன்னதை மீறி, முடிவு எடுக்கக் கூடாது என்பதால், அவர் அமைதியாக இருந்தார். 2014 லோக்சபா தேர்தலிலும், வழக்கம் போல, கட்சிக்காக, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், அந்த சமயத்திலும், அவரை பிரசாரம் செய்ய விடாமல், கட்சியினர் சிலரே தடை போட்டனர். கட்சி நடவடிக்கைகளில் இருந்து, மொத்தமாக புறக்கணித்தனர். பல நிகழ்வுகளை சொல்லாமலேயே விட்டனர். இருந்தாலும், தகவல் தெரிந்து, தன்னிச்சையாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு போய் வந்தார். அந்த சமயத்திலும், அவமரியாதை தொடர்ந்தது. திட்டமிட்டு நடப்பதால்...ஆக, திட்டமிட்டு எல்லாமே நடப்பதால், விலகி இருப்பது தான், உத்தமம் என, முடிவெடுத்து விலகி விட்டார்.இப்படி தான் ஏற்கனவே, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் என, திரை உலக பிரபலங்கள் பலரும், தி.மு.க.,வில் அவமானப்படுத்தி ஒதுக்கப்பட்டனர். கட்சிக்கு அது, நல்லதில்லை என, தெரிந்தும், அதை அவர்கள் திட்டமிட்டு செய்யும் போது, அங்கே எப்படி தொடர்ந்து இருக்க முடியும் என்பதால் தான், விலகல் முடிவுக்கு வந்தார்.மாற்று முகாம்களில் இருந்து, அழைப்புகள் வருகின்றன. குறிப்பாக, பா.ஜ., தரப்பில் இருந்து, சிலர் பேசினர். கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இருந்துவிட்டு, நல்ல முடிவை அறிவிப்பார். ஆனால், அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகமாட்டார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.>- நமது சிறப்பு நிருபர்dinamalar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக