வெள்ளி, 20 ஜூன், 2014

இந்தி திணிப்புக்கு மாயாவதி உட்பட பல மாநில தலைவர்களும் கடும் எதிர்ப்பு

டெல்லி: சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற இந்தி திணிப்பு உத்தரவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தைவிட இந்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இந்த உத்தரவுக்கு தமிழகம், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தி பேசும் மக்கள் நிறைந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், மத்திய அரசின் நடவடிக்கை தவறானது; மாநில மொழிகளைத்தான் மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தி பேசும் உத்தரப்பிரதேசத்தை மொழிவாரியாக எத்தனை சிறிய மாநிலங்களாக வேண்டுமானாலும் பிரிக்கலாம் என்று வலியுறுத்தி வருபவர் மாயாவதி என்பது குறிப்பிடத்தக்கது tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக