ஞாயிறு, 22 ஜூன், 2014

மோடி இளம்பெண்ணை வேவு பார்த்த விசாரணை ஊத்தி மூடப்படுகிறது !

இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரத்தில், விசாரணையை முழுமையாக கைவிடுவதற்கான நடவடிக்கையை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்கிறது.
இந்த விசாரணையைக் கைவிடும் திட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவரது உத்தரவின் பேரில் இளம்பெண்ணை போலீஸார் வேவு பார்த்ததாக புகார் எழுந்தது.
நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்படும் இந்தப் புகார் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிப்பது என்று கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்யும் பணி தாமதமடைந்தது. பெரிய மனுஷாள்னா வீக்னஸ் இருக்கதாய்ன் செய்யும் .. இனி வேறு பல கூத்துக்களும் நடக்கும் பாக்கதாய்ன் போரீக !

அதன்பின், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை அறிவிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு பாஜக மட்டுமல்லாது, காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சி தனது முடிவை மாற்றிக் கொண்டது. விசாரணை ஆணையத்தின் தலைவராக நீதிபதியை நியமிக்கும் நடவடிக்கையை கைவிடப்படுவதாகவும், நீதிபதியை நியமிப்பது தொடர்பான முடிவை அடுத்ததாக பொறுப்பேற்கவுள்ள அரசிடம் விட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. நரேந்திர மோடி பிரதமரானார். சமீபத்தில், பெண் வேவு பார்ப்பு விவகாரம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்று உள்துறை இணையமைச்சர் கிரன் ரிஜ்ஜு குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்து முந்தைய மன்மோகன் அரசின் நடவடிக்கைகளை பாஜக கடுமையாக எதிர்த்து வந்தது.
இந்தச் சூழலில், பெண் வேவு பார்ப்பு விசாரணையை முழுமையாக கைவிட்டு, இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக