செவ்வாய், 3 ஜூன், 2014

தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் தமிழக மத போதகர் கடத்தல்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் மத போதகர் அலெக்சிஸ் பிரேம் குமார், ஆயுதம்
தாங்கிய தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். சிவகங்கையைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம் குமார் என்ற மத போதகர், ஆப்கானிஸ்தானில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஹெராத் பகுதியில் உள்ள அகதிகள் பள்ளிக்கு நேற்று பிற்பகல் சென்றிருந்தபோது அங்கு வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.  இந்த கடத்தல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தலிபான் தீவிரவாதிகளின் கைவரிசையாகத்தான் இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஹராத் அதிகாரிகளை அங்குள்ள இந்திய அதிகாரிகள் தொடர்புகொண்டு நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே ஹெராத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக