திங்கள், 16 ஜூன், 2014

மோடிக்கு எதிராக எழுதிய கேரளா மாணவர்கள் கைது ! இதுதாண்டா பிஜேபி ?

கேரள மாநிலம் திருச்சூரில், கல்லூரி இதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக "வெறுப்பூட்டும் வகையில்' கருத்துகளை வெளியிட்டதாக 9 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் இதழில், பிரதமர் மோடிக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் கருத்துகள் வெளியானதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அந்த இதழின் ஆசிரியர், துணை ஆசிரியர்கள், இதழின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 கல்லூரி மாணவர்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மன்மோகன் சிங்கை பற்றி எந்த நாலு காலும் நாக்கில் நரம்பில்லாமல் எதுவும் பேசலாம்  எதுவும் எழுதலாம் ? இப்ப தெரியும் அப்பன் அருமை !

அவர்கள் 9 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 153ஆவது பிரிவின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரைவில், அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள்' என்று போலீஸார் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி இதழில், பிரதமர் மோடியின் படம், சர்வாதிகாரியும் ஜெர்மன் முன்னாள் அதிபருமான ஹிட்லர், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஒசாமா பின்லேடன், அஜ்மல் கசாப், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்த கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நடைபெற்ற சில நாள்களுக்குள், கேரளத்தில் மீண்டும் அதேபோல் கைது சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. dinamani,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக