புதன், 4 ஜூன், 2014

ஆள் கடத்தல், கொலை ! போலீஸ் டி.ஜி.பி. எஸ்.கே.சர்மா மீது வழக்கு !

அமிர்தசரஸ், ஜுன் 4- 24 ஆண்டுகளுக்கு முன்னர் விசாரணைக்காக
போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட நபர் மாயமானதால் பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், ரோபார் மாவட்டத்தை சேர்ந்த குல்தீப் சிங்(21) என்பவர் கடந்த 1990-ம் ஆண்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். பின்னர், அவர் என்ன ஆனார்? என்பது தொடர்பான விபரம் எதையும் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். அவர் காணாமல் போய் விட்டதாக கூறி தங்களது பொறுப்பை தட்டிக் கழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் என் மகனை கடத்திச் சென்று, அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடுகின்றனர் என்று குல்தீப் சிங்கின் தந்தை ரோபார் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


இது தொடர்பாக நடந்த விசாரணையில் மனுதாரரின் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை உறுதி செய்த கோர்ட், இச்சம்பவத்துக்கு காரணமான முன்னாள் டி.ஐ.ஜி., 2 போலீசார் மற்றும் பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. எஸ்.கே.சர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவிட்டது.

இதனையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்ற டி.ஜி.பி.யின் கோரிக்கையை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக