வியாழன், 12 ஜூன், 2014

உ.பி.யில் இளம் பெண்னை போலீஸ் நிலயத்தில் வைத்து கற்பழித்த போலீசு ! நாடு விளங்கிடும்ல ?

உத்தரப் பிரதேசத்தில் நான்கு காவல்துறையினர் சேர்ந்து ஒரு பெண்ணை, கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சமர்பூர் காவல் நிலையத்தில், வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தனது கணவனைப் பார்க்க இளம் பெண் ஒருவர் சென்றார். அப்போது அங்கியிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் , 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளம் பெண் மறுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை காவல்நிலைய வளாகத்திலிருந்த காவல்துறையினர் குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் மூன்று காவல் துறையினர் சேர்ந்து அந்த பெண்னை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மற்ற மூன்று காவல்துறையினர் தேடப்பட்டு  வருவதாக‘ மாவட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் அங்கு காவல் நிலையத்திலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக