செவ்வாய், 10 ஜூன், 2014

புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல்

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், அரசின் புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழக அரசின் சத்துணவு திட்டம் மூலமாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயிலும், ஏழை, எளிய மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைந்து வருகின்றனர்.சத்துணவில், சாதம், சாம்பார், அவித்த முட்டை, பச்சைப் பட்டாணி சுண்டல், உருளைக் கிழங்கு கூட்டு ஆகிய, உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சத்துணவில், காலத்துக்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்து, 2012 நவம்பரில், புதிய வகையில், 13 வகையான, உணவு முறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.அதன்படி, அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, நாள் வாரியாக, தக்காளி சாதம், காய்கறி சாதம், எலுமிச்சை சாதம், பருப்பு சாதம், கலவை சாதம் மற்றும் வாரத்தில், மூன்று நாட்களுக்கு, அவித்த மற்றும் மசாலா முட்டை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில், நாள் வாரியாக, 'பிரைடு' ரைஸ், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம், கீரைச் சாதம், தக்காளி சாதம், அவித்த மற்றும் மசாலா முட்டை, பருப்பு மற்றும் பொரியல் ஆகியவை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. சத்துணவில் முட்ட போட்ட கலைஞருக்கு மக்கள் தேர்தலில் முட்ட போட்டு நன்றி கடன கட்டினார்கள் , நல்லவர்களின் வயித்தெரிச்சல் சும்மா விடுமா அதான் இந்த திட்டம் ஆட்டம் காணுது
இதற்காக, அங்கன்வாடி சமையலர், உதவியாளர், சத்துணவு அமைப்பாளர் ஆகியோருக்கு, சமையல் கலை நிபுணர் மூலம், மாவட்டம் தோறும் பயற்சி அளிக்கப்பட்டது.சத்துணவு தயாரிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து அரிசி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் முட்டை வழங்கப்படுகிறது. மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய், விறகு ஆகியவற்றின் தேவைக்கான செலவு தொகை, ஐந்தாம் வகுப்பு வரை, தலா, ஒரு மாணவருக்கு, 70 காசு; 10ம் வகுப்பு வரை, 80 காசு என்ற ரீதியில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2103 மார்ச், 20ல், தேர்வு செய்யப்பட்ட, அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிகளில், புதிய வகை உணவு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தால், மளிகை பொருள் செலவும், சமையல் எண்ணெய், மசாலா பொருள், விறகு ஆகியவற்றின் தேவையும் அதிகரித்தது. 70 காசு மட்டும் ஒதுக்கீடு செய்வதால், திட்டத்தை, அனைத்து மட்டத்திலும் விரிவுபடுத்தவில்லை.

'காஸ்' இணைப்பு



கடந்த, கல்வி ஆண்டில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், மூன்று பள்ளி என்ற நிலையில், தற்போது, அதுவும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக, சத்துணவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்துணவு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய சத்துணவு திட்டத்தை, அனைத்து பள்ளி மற்றும் மையங்களில் செயல்படுத்த வேண்டுமானால், சம்பந்தப்பட்ட சத்துணவு மையத்திற்கு, 'காஸ்' இணைப்பு வழங்க வேண்டும். விறகு அடுப்பில், சுகாதாரமான உணவை தயாரிக்க முடியாது.புதிய சத்துணவு திட்டப்படி, தலா, ஒரு மாணவனுக்கு, ஒரு ரூபாய்க்கு மேல் செலவு பிடிக்கும். அதனால், நடப்பாண்டும், மாநிலம் முழுவதும், புதிய சத்துணவு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுமா என, தெரியவில்லை.கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், சில மையங்களில் செயல்படுத்தி வந்த, புதிய சத்துணவு திட்டமும், கைவிடப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக