சனி, 28 ஜூன், 2014

நாளைய இயக்குனர் குறும்படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டால் ? அனேகமாக வெற்றி நிச்சயம் !

குறும்படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டால் அது ரசிகர்களிடம் அமோக
வரவேற்பை பெறும் என்ற முதல் நம்பிக்கையை அபார வெற்றியின் மூலம் நிரூபித்த படம் ‘பீட்சா’. சிறிய பட்ஜெட் படங்களும் தரமான வெற்றியை அடைய முடியும் என்ற வாசலைத் திறந்து வைத்தவர் பீட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில் அடுத்து இயக்கிய படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்கள் முன்பு நடந்தது. விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட ஜிகர்தண்டா இன்னும் வெளியாகவில்லை. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நடத்து வரும் மோதலால் தான் படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது என்று சொல்லப்படுகிறது.மதுரையை மையமாக கொண்ட கதை ஜிகர்தண்டா. மதுரை மாவட்ட ரௌடிகளைப் பற்றியும் அங்கு நடக்கும் கடத்தல் சம்பவங்கள் பற்றியும் கதை நகர்கிறது. படத்தில் கத்தியால் குத்தி குடலை வெளியே எடுக்கிற மாதிரி அதிரவைக்கும் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் தனிக்கை முழுவினர். ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தால் வரிவிலக்கு கிடையாது என்பதாலும், படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது என்பதாலும் ‘யு’ சான்றிதழ் வாங்க முயன்றுள்ளார் தயாரிப்பாளர் 'ஃபைவ்ஸ்டார்’ கதிரேசன். வன்முறைக் காட்சிகளை நீக்கவும், படத்தின் நீளத்தை குறைக்குமாறும் இயக்குனரிடம் கேட்டுள்ளார்.அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒப்புக்கொள்ளாததால், தானே படத்தின் நீளத்தைக் குறைக்க முயற்சிகள் எடுத்துள்ளார் தயாரிப்பாளர்.
இதனால், படைப்பு சுதந்திரம் பரிபோகிறது என்று இயக்குனர் சங்கத்தில் முறையிட்டுள்ளார் இயக்குனர். தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத்தில் தன் தரப்பு நியாயத்தை வைத்துள்ளார்இருவரையும் அழைத்து பேசிப் பார்த்தனர் இரண்டு சங்கத் தலைவர்களும், ஆனால் அவரவர் முடிவில் உறுதியாக இருந்து அடம்பிடிக்கிறார்கள் இருவரும்! வன்முறைக் காட்சிகள் வெட்டப்பட்டாலும் ‘யு/ஏ’ சன்றிதழ் தான் கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக சொல்கிறார்கள் தனிக்கைக்குழு தரப்பு. நீயா நானா என்று இயக்குனரும் தயாரிப்பாளரும் அடம்பிடிக்காமல், விட்டுக்கொடுத்து போனால் ஜிகர்தண்டாவை விரைவில் ரசிகர்கள் ருசிக்கலாம்.nakkheeran,in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக