வியாழன், 26 ஜூன், 2014

மோடி பயப்படுகிறாரா ? கோபால் சுப்ரமணியம்: நீதிபதிகள் நியமன பரிந்துரை பட்டியலில் என் பெயரை நீக்குங்கள்

Gopal Subramanium, a top lawyer for the previous government, has said he no longer wants to be considered for promotion to a Supreme Court judge. "I am sorry that the Supreme Court did not stand up for me," said Mr Subramanium, 56, to NDTV. His decision comes after the government rejected Mr Subramanium from a list of four names recommended for appointment as Supreme Court judges by a panel headed by the Chief Justice of India, RM Lodha.
As amicus curiae in the Sohrabuddin fake encounter case, Subramanium was critical of the Gujarat government headed by Narendra Modi and brought out new facts on the basis of which the Supreme Court had ordered a CBI probe into the case.
புதுடில்லி: 'சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து, என் பெயரை நீக்குங்கள்; எனக்கு நீதிபதி பதவி வேண்டாம்' என, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சொலிசிட்டர் ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்களில் கோபால் சுப்ரமணியமும் ஒருவர். இவர், தமிழகத்தை சேர்ந்தவர். ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு உள்ளிட்ட, பல முக்கிய வழக்குகளில், அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்துக்கு, கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன், கோபால் சுப்ரமணியம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.


இந்த பட்டியலை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதி குழு, மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பியது. இதில், கோபால் சுப்ரமணியத்தின் பெயரை, மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும், மற்றவர்களை நீதிபதிகளாக தேர்வு செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தகவல் வெளியானது.மேலும், கோபால் சுப்ரமணியத்தை நீதிபதியாக நியமிப்பது குறித்து, மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்துள்ள கோபால் சுப்ரமணியம், 'நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து, என் பெயரை நீக்குங்கள்; நீதிபதியாக, நான் விரும்பவில்லை' என, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆவேச கடிதம்



இதுகுறித்து, கோபால் சுப்ரமணியம் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், 'இதுபோன்ற சிக்கலான ஒரு சூழ்நிலையில், தன் பெயர், நீதிபதி நியமனத்துக்கு மறுபரி சீலனை செய்யப்படுவதை, அவர் விரும்பவில்லை. இதனால் தான், தலைமை நீதிபதி தலைமை யிலான குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்' என்றன. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக