திங்கள், 9 ஜூன், 2014

இறந்த பெரியாரியல்வாதி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண்கள்

திருச்சியில் இறந்த பெரியாரியல்வாதி ஒருவர் உடலை, பெண்கள் ஆறு பேர் சுமந்து சென்று அடக்கம் செய்த சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் வைரமுத்து . இவர் உடல் நலக்குறைவால் இறந்தார். பெரியார் கொள்கையில் பற்று கொண்டிருந்த இவரது இறுதி அடக்க நிகழ்வுகளை பெண்களை கொண்டு நடத்துவதற்கு அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி வைரமுத்துவின் உடலை கருப்பு உடை அணிந்த 6 பெண்கள் அவரது வீட்டில் இருந்து சுமந்துகொண்டு டோல்கேட் வழியாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு சென்றனர். அங்கு வைரமுத்துவின் மனைவி செல்வி, அவரது மகள் சாந்தி மற்றும் அவரது உறவுப் பெண்களே அடக்க நிகழ்வுகளை நடத்தினர். இறந்தவர் உடலுக்கு பெண்களே அடக்க நிகழ்வுகளை செய்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக