செவ்வாய், 3 ஜூன், 2014

உத்திர பிரதேஷ் : பெண் நீதிபதியை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்தனர் !

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் 22 வயது பெண் ஒருவர் உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உ.பி.யில் உச்சகட்ட அக்கிரமம்: பெண் நீதிபதி பலாத்காரம்- உயிர் ஊசல்! இப்படி அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் அடுத்தடுத்து பலாத்காரங்கள் நடக்கிறது. அவரோ மீடியாக்கள் தான் தனது மாநிலத்தில் நடப்பதை பெரிதுபடுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அலிகரில் பெண் நீதிபதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. உடல் முழுவதும் காயங்களுடன் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மயங்கிய நிலையில் அவர் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் பாதி பாட்டில் பூச்சிமருந்து கிடந்தது. விஷமிகள் அவரை பலாத்காரம் செய்து அவருக்கு வலுக்கட்டாயமாக பூச்சி மருந்து கொடுத்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதியின் நிலைமை மோசமாக உள்ளது.  பாலியல் பலாத்கார சம்பவங்கள்  இந்த அளவு இடம் பெறுவதற்கு  என்ன காரணம் ? நம்ப கலாசாரம்  ? மதம் ? பாலியல் வறுமை ?
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் பதாவ்னில் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்ட சம்பவத்திற்கு உள்நாட்டு தலைவர்கள் மட்டும் இன்றி ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளது.

/tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக