வியாழன், 5 ஜூன், 2014

தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை மாநாடு

சென்னை லயோலா கல்லூரியில் தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பா.வளர்மதி பேசியபோது,  ’’பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
விதவைகள் மறுமணத்துக்காக உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய கல்வித்தகுதி இல்லாததால் பலர் பயனடைய முடியவில்லை.
கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு "ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்தின்படி' மாதம்தோறும் ரூ.500 ஆக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகை தமிழக அரசால் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பை முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது.விதவைப் பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு மேலும் செயல்படுத்த வேண்டிய கோரிக்கைகளை அளித்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார் அவர்.
மாநாட்டில் விதவைகள் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் விதவைகளின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்.
விதவைகளின் வாழ்வுநிலை குறித்த கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் நிதி ஒதுக்கீடும், வளர்ச்சித் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

அரசு நடத்தும் பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில், கல்வி மற்றும் தொழில் திறன்தகுதியுள்ள விதவைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக