புதன், 25 ஜூன், 2014

80 கி.மீட்டருக்கு 2ம் வகுப்பு கட்டணம் உயரவில்லை சலுகைகள் அறிவிப்பு !

புதுடில்லி : ரயில்வே துறை சமீபத்தில் அறிவித்த, ரயில் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதேநேரத்தில், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறநகர் ரயில் கட்டணத்தில் மட்டும், நேற்று திடீரென சலு கை அறிவிக்கப்பட்டது. அதன்படி, புறநகர் ரயில்களில், 80 கி.மீ., தூரத்திற்கு மட்டும், 2ம் வகுப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

வட மாநிலத்தவர்கள் பெரும்பாலும் டிக்கட் எடுக்காமல் பயணம் செய்வார்கள்..ரயில் நிலையத்தை நெருங்குவதற்கு முன் சிக்னலுக்காக ரயில் நிக்கும் போது எல்லோரும் கீழே குதித்து ஓடுவார்கள்..அதே மாதிரி முன் பதிவு செய்யாமல் இடை இடையே ஏறுபவர்கள்(உதாரணத்துக்கு நாக்பூர்,ஆக்ரா,ஜான்சி,குவாலியர்,பானிபத்,சோனிபத்,அம்பாலா இது போன்ற இடங்களில்) ரயிலில் ஏறிய பிறகு டிக்கட் பரிசோதகரிடம் பணத்தை கொடுத்து தூங்குவதற்கு இருக்கை பதிவு செய்வார்கள்..ஆனா அந்த குறிப்பிட்ட இருக்கைக்கு பணத்தை வாங்கிய பரிசோதகர் முறையான ரசித்து தர மாட்டார்..இது போன்ற தில்லு முல்லுகள் நம் ரயிவே துறையில் நெறைய நடப்பதால் தான் ரயில்வே துறை இந்த அளவுக்கு நிதி சுமையில் சிக்கி தவிக்கிறது..நான் பிறந்தது தமிழ்நாடாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சண்டிகார் என்பதால் வட மாநிலத்தை நன்கு அறிவேன்..(என் பெற்றோர்கள் இருவருமே சண்டிகரில் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள்)..கட்டணத்தை உயர்த்த காட்டும் அக்கறையை ரயில் நிலையம், ரயில் கழிவறையை பராமரிப்பதிலும் காட்ட வேண்டும் என்பதே என் போன்றோர்களின் எதிர் பார்ப்பு...

ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனால், ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கவும், புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்தவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறித்த காலத்திற்குள் முடிக்கவும், ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.

பயணிகள் கட்டணம்
அதன்படி, ரயில் பயணிகள் கட்டணம், 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம், 6.5 சதவீதமும், இம்மாதம், 20ம் தேதி உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு மூலம், ரயில்வேக்கு, 8,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.ஏற்கனவே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில், இன்றுமுதல் பயணம் மேற்கொள்வோரிடம், ரயில்களில், டிக்கெட் பரிசோதகரே உயர்த்தப்பட்ட கட்டணத்தை வசூலித்துக் கொள்வார் அல்லது முன்பதிவு அலுவலகங்களில், பயணிகள் தங்களின் பயணத்தை துவக்கும் முன், கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முன்பதிவு கட்டணம்
ரயில் டிக்கெட்டுக்கான, அடிப்படையான கட்டணத்தில் மட்டுமே, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் கூடுதல் கட்டணம் போன்றவற்றில், எந்த மாற்றமும் இல்லை.அதேநேரத்தில், முன்பதிவு செய்யப்படாத (அன்ரிசர்வ்டு) டிக்கெட் எடுத்து பயணிப்போருக்கு, வரும், 28ம் தேதி முதலே, கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.அத்துடன், புறநகர் ரயில்களிலும், புறநகர் அல்லாத ரயில்களிலும், இரண்டாம் வகுப்பு கட்டணம், 80 கி.மீ., வரை உயர்த்தப்படவில்லை. அதற்கு மேலானதூரத்திற்கு, கட்டண உயர்வு பொருந்தும்.புறநகர் ரயில்களில், ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் மற்றும் ஒரு வருட அடிப்படையில், சீசன் டிக்கெட்டு பெற்று பயணிப்பவர்களுக்கும், 14.2 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.மேலும், புறநகர் ரயில்களில், முதல் வகுப்பில் பயணிப்பதற்கான மாதாந்திர சீசன் டிக்கெட் பெறுவோர், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள, இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கெட்டுக்கான கட்டணத்தை விட, நான்கு மடங்கு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும். அதில், மாற்றம் செய்யப்படவில்லை. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக