வெள்ளி, 13 ஜூன், 2014

மும்பை சுமார் 700 நடன பார்களின் 75 ஆயிரம் பெண்கள் நடுத்தெருவில் ? இந்துத்துவ அரசின் தாலிபானிசம் ?


மும்பை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள நடன பார்களுக்கு தடை விதிக்க சிவசேனா பாஜக கூட்டணி  மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. திருத்த மசோதாவில்  3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில்லும் இந்த தடை உத்தரவை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு நடன நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டபோது எலைட் பிரிவில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளித்தது. இதையடுத்து மீண்டும் அம்மாநில அரசு புதிய சட்டம் மூலம் அதற்கு தடை விதித்துள்ளது.
இதற்கு அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் சுமார 700க்கும் மேற்பட நடன பார்களில் பணிபுரியும் 75 ஆயிரம் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் எனற கோரிக்கை எழுந்துள்ளது.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக