வியாழன், 12 ஜூன், 2014

3 ஜாதகத்தோடு பெற்றோர் அலையுறாய்ங்க ! ஆனா அனுஷ்கா பிடிகொடுக்கிராப்பல இல்லையாம் ?

நடிகை அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் 3 மாப்பிள்ளைகள் பார்த்து வைத்துள்ளனர்.அனுஷ்காவுக்கு பின்னர் திரையுலகுக்கு வந்த அமலா பால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணக்கிறார். நஸ்ரியா நாசிம் நடிகர் பஹத் பாசிலை மணக்கிறார். ‘ஜூனியர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறார்கள். அனுஷ்காவுக்கு எப்போது திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்’ என்று அவரது பெற்றோரிடம் உறவினர்கள் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார்களாம். இதையடுத்து அனுஷ்காவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் பெற்றோர். பல மாப்பிள்ளைகளை பார்த்து அதில் தொழில் அதிபர், திரைப்பட இயக்குனர், இன்ஜினியர் என 3 மாப்பிள்ளைகளை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் யாரை அனுஷ்காவுக்கு பிடிக்கிறதோ அவருக்கு மணம் முடித்து வைக்க எண்ணி உள்ளனர். ஆனால் இதுபற்றி அனுஷ்கா தனதுமுடிவை இன்னும்
தெரிவிக்கவில்லையாம்.தற்போது ரஜினியுடன் ‘லிங்கா, அஜீத்துடன் புதிய படம், ‘பாஹுபலி, ராணி ருத்ரம்மா தேவிஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துக் கொடுக்கும்படி அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அடுத்த ஆண்டு அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக