திங்கள், 9 ஜூன், 2014

கராச்சி விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி

கராச்சி:பாகிஸ்தான், கராச்சி விமானநிலையத்தில் நேற்று இரவு புகுந்து பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு 13பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 10 பயங்கரவாதிகள் உள்பட 21 பேர் பலியானார்கள் .மேலும் இரு விமானங்களும் சேதமடைந்தது .கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் புகுந்த 15 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை போல போலியான அடையாள அட்டையை காட்டி உள்ளே புகுந்து, அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். பயங்கரவாதிகள் மேலும் கையெறி குண்டுகள் தாக்குதலும் நடத்தியுள்ளனர். அப்பகுதியை சுதாரித்து சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதனையடுத்து விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சாலைகளையும் சீல் வைக்கப்பட்டன.
விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை: கடுமையான சோதனைக்கு பின்னர் தான் மீட்பு படையினர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதே வேளையில் விமான போக்குவரத்து முற்றிலும் அங்கு நிறுத்தப்பட்டுவிட்டது.அங்கு வரும் அனைத்து விமானங்களும் மற்றொரு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பாதுகாப்பு படையினரிடம் பயணிகளை பத்திரமாக மீட்குமாறு கோரிக்கை விடுத்தார். 6 மணி நேர தாக்குதல்: பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் விமானப் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு 10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றுவிட்டனர். இத்தாக்குதல் 6 மணி நேரம் நீடித்த பின்னர் கட்டுப்பாட்டுக்கு வந்தது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக