ஞாயிறு, 1 ஜூன், 2014

2 வயது குழந்தைக்கும் முழுகட்டணம் கேட்டு நடுவழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து !

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விதியின்படி பேருந்தில் 130 செ.மீ.க்கு மேல் உள்ளவர்களுக்கு முழக்கட்டணம் (டிக்கெட்) என நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக்கெட் கிடையாது முழுடிக்கெட்தான் எடுக்கவேண்டும் என்று தனியார் பேருந்துகளில் கட்டாயப்படுத்தப்படுகிறது.ஜீன் 1 ஞயிற்றுக்கிழமை மதியம் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்தில் 2 வயது குழந்தையுடன் வந்த பயணியிடம் நடத்துநர் 2 வயது சிறுவனுக்கும் டிக்கெட் கேட்டுள்ளார். பயணி மறுக்கவே பயணியை யாரிடம் வேண்டுமானலும் சொல்லுங்கள் என்று தரைக்குறைவாக பேசியும் இடையில் பேருந்து நிறுத்தமே இல்லாத பகுதியில் இறக்க சொல்லியுள்ளார்.
அந்த பயணி தனது 2 வயது சிறுவனுக்கும் முழு டிக்கெட் எடுத்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த உடன் பேருந்து நிலையத்தில் அந்த தனியார் பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பரபரப்பு எற்பட்டது.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முறையாக பேருந்துகளில் ஆய்வு செய்யாமல் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்ற பிறகு சிறிது காலம் ஆய்வு செய்து விட்டு போகின்றார்கள். தொடர்ந்து சம்பந்தபட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

இதுகுறித்து இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் த.செங்கோடன் தெரிவித்தபோது, புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகள் வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் அதிவேகமாக இயக்கப்படுகிறது. தொலைதூரம் செல்பவர்கள் மட்டும்தான் இருக்கையில் அமரவேண்டும். இடையில் உள்ள ஊர்களுக்கு வருபவர்கள் அமரகூடாது என்றும், வரும் வழியில் உள்ள ஊர்களில் பேருந்து நிற்காது, அதேபோல் பேருந்தில் குழந்தைகளுக்கு அரைடிக்கெட் கிடையாது, முழுடிக்கெட்தான் எடுக்க வேண்டும் என்ற எழுதபடாத விதிமுறைகளை கூறியும் மறுக்கும் பயணிகளை யாரிடம் வேண்டுமானலும் சொல்லுங்கள் என்று தரைக்குறைவாகபேசியும் இடையில் இறக்கிவிடும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

அனுமதி பெற்ற பேருந்து நிறுத்தங்களில் கூட நிறுத்த மறுக்கிறார்கள். மேலும் பேருந்தில் அளவுக்கு அதிகாமன ஒலியில் பாடல்கள் ஒலிப்பரப்படுவதால் முதியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக தனியார் பேருந்துகளில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

-இரா.பகத்சிங் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக