சனி, 7 ஜூன், 2014

எம்.பி.ஏ. மாணவர் போலி என்கவுன்டர் வழக்கில் 18 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பு


உத்தரகாண்ட் மாநிலத்தில் எம்.பி.ஏ. மாணவர் கொல்லபட்ட போலி
என்கவுன்டர் வழக்கில் 18 போலீசார் குற்றவாளிகள் என சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
போலி என்கவுன்டர் உத்தரகாண்ட் மாநிலத்தில் 2009–ம் ஆண்டு ஜூலை 3–ந் தேதி காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர்சிங் என்ற எம்.பி.ஏ. மாணவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பட்டீல் அந்த மாநிலத்துக்கு வருகை தந்தபோது, மோகினி ரோட்டில் ரன்பீர் சிங்கும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு குற்ற செயலில் ஈடுபட முயன்றதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரன்பீர்சிங் உடலில் 12 குண்டுகள் துளைத்திருந்ததும், 27 இடங்களில் ஆழமான காயங்கள் இருந்ததும் அவர் சித்ரவதை செய்யப்பட்டு போலி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி 18 போலீசார் மீது வழக்கு பதிவு செய்தது.
குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. நீதிபதி ஜே.பி.எஸ்.மாலிக் நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் அவர் 18 பேரும் குற்றவாளிகள் என்றும் ஏற்கனவே அனுபவித்த தண்டனையால் ஒருவர் விடுதலை செய்யப்படுவதாகவும் மீதி 17 பேருக்கு தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக